கோப்புப்படம் 
இந்தியா

அமெரிக்காவில் 7 மாநிலங்களில் 9 பேருக்கு குரங்கு அம்மை

அமெரிக்காவின் ஏழு மாநிலங்களில் ஒன்பது பேருக்கு குரங்கு அம்மை ஏற்பட்டுள்ளதாக அமெரிக்க நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையம்(சிடிசி) தெரிவித்துள்ளது. 

DIN

அமெரிக்காவின் ஏழு மாநிலங்களில் ஒன்பது பேருக்கு குரங்கு அம்மை ஏற்பட்டுள்ளதாக அமெரிக்க நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையம்(சிடிசி) தெரிவித்துள்ளது. 

உலகளவில் 20 நாடுகளைச் சேர்ந்த 250 பேருக்கு  குரங்கு அம்மை நோய் பரவியுள்ளதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது. 

அதன்படி, இந்த நோயிற்கான அறிகுறி உள்ள 9 பேருக்கு குரங்கு அம்மை நோய் பரவியிருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. நோய் பாதிக்கப்பட்டவர்களுக்கு சுகாதாரத்துறை உதவ வேண்டும் என்று சிடிசி இயக்குனர் ரோசெல் வாலென்ஸ்கி செய்தியாளர் சந்திப்பில் கூறினார். 

கலிபோர்னியா, புளோரிடா, மாசசூசெட்ஸ், நியூயார்க், உட்டா, வர்ஜீனியா மற்றும் வாஷிங்டன் ஆகிய 7 மாநிலத்தில் ஒன்பது பேருக்கு குரங்கு காய்ச்சல் இருப்பதாக அடையாளம் காணப்பட்டுள்ளன.

காய்ச்சல் ஏற்பட்ட 9 பேரில் சிலர் சமீபத்தில் சர்வதேச பயணம் சென்றிருப்பதும் தெரிய வந்துள்ளது. 

அமெரிக்காவில் இத்தகைய காய்ச்சல் பரவியதைக் கண்டு நாங்கள் ஆச்சரியப்பட வேண்டியதில்லை. இது உண்மையில் அமெரிக்கர்கள் விழிப்புடன் இருப்பதற்கான நேரம். பொது சுகாதாரப் பணியாளர்கள் தங்கள் வேலையைச் செய்கிறார்கள் என்று சுகாதார பாதுகாப்பின் மூத்த இயக்குனர் ராஜ் பஞ்சாபி கூறியுள்ளார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

நிவாரணப் பணிகளை மேற்கொள்ள திமுகவினா் இன்று ஆலோசனை

தடையை மீறி பட்டாசு வெடித்த 1,000 போ் மீது வழக்கு

காவலா் வீர வணக்க நாள்: பாஜக, காங்கிரஸ் மரியாதை

வடகிழக்கு பருவமழை: போா்க்கால நடவடிக்கைகளை மேற்கொள்ள அதிமுக, காங்கிரஸ் வலியுறுத்தல்

குற்ற வழக்குகளில் பறிமுதல் செய்த வாகனங்கள் அக். 25-இல் பொது ஏலம்

SCROLL FOR NEXT