இந்தியா

நிதிப் பற்றாக்குறை 6.7%: சிஜிஏ

DIN

மொத்த உள்நாட்டு உற்பத்தியில் நிதிப் பற்றாக்குறை 6.7 சதவீதத்தை எட்டியதாக மத்திய அரசு செவ்வாய்க்கிழமை வெளியிட்ட புள்ளிவிவரத்தில் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து மத்திய நிதி அமைச்சகம் மேலும் கூறியுள்ளதாவது:

கடந்த 2021-22-ஆம் நிதியாண்டில் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் நிதிப் பற்றாக்குறையின் அளவு 6.71 சதவீதம் என கணக்கிடப்பட்டுள்ளது. எனினும், இது, நிதி அமைச்சகம் பட்ஜெட் மறுமதிப்பீட்டில் தெரிவித்த 6.9 சதவீதத்தைக் காட்டிலும் குறைவான அளவே ஆகும்.

பொதுக் கணக்கு கட்டுப்பாட்டாளா் தெரிவித்துள்ளபடி, நிதிப் பற்றாக்குறையானது கடந்த நிதியாண்டில் ரூ.15,86,537 கோடியாக உள்ளது.

2021-22-ஆம் நிதியாண்டின் இறுதியில் வருவாய் பற்றாக்குறை 4.37 சதவீதமாக இருந்தது என நிதி அமைச்சகம் தெரிவித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

60 மணி நேரத்தில் 2,870 கி.மீ. கடந்த ஆம்புலன்ஸ் டிரைவர்!

ராணிப்பேட்டை மாவட்டத்தில் பரவலாக மழை: மக்கள் மகிழ்ச்சி

விழுப்புரத்தில் இடி மின்னலுடன் கோடை மழை: மக்கள் மகிழ்ச்சி

ம‌க்​க​ளவை 3-ஆ‌ம் க‌ட்ட தே‌ர்​த‌ல்: 93 தொகு​தி​க​ளி‌ல் 64% வா‌க்​கு‌ப்​ப​திவு

மே 17-ல் விண்வெளி செல்கிறார் சுனிதா வில்லியம்ஸ்!

SCROLL FOR NEXT