ஜார்க்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரன் 
இந்தியா

ஜார்கண்ட் முதல்வர் நேரில் ஆஜராக அமலாக்கத்துறை சம்மன்

நிலக்கரி சுரங்க ஊழல் குற்றச்சாட்டு குறித்து விசாரணைக்கு ஜார்கண்ட் முதல்வர் ஹேமந்த சோரன் நேரில் ஆஜராக அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

DIN

நிலக்கரி சுரங்க ஊழல் குற்றச்சாட்டு குறித்து விசாரணைக்கு ஜார்கண்ட் முதல்வர் ஹேமந்த சோரன் நேரில் ஆஜராக அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

தனது பதவியை தவறாக பயன்படுத்தி ஜாா்க்கண்ட் தலைநகா் ராஞ்சியில் 0.88 ஏக்கா் பரப்பு கல்குவாரியை தன் பெயரில் குத்தகைக்கு எடுத்ததாக அந்த மாநில முதல்வா் ஹேமந்த் சோரன் மீது ஜாா்க்கண்ட் முன்னாள் முதல்வரும், பாஜக தலைவருமான ரகுபா்தாஸ் குற்றஞ்சாட்டினாா். அதுதொடா்பான ஆவணங்களையும் அவா் வெளியிட்டிருந்தாா்.

இதனைத் தொடர்ந்து கடந்த ஆகஸ்ட் மாதம் ஹேமந்தை தகுதி நீக்கம் செய்யக் கோரி ஜார்கண்ட் ஆளுநருக்கு தேர்தல் ஆணையம் பரிந்துரைத்தது. இதற்கிடையே சட்டப்பேரவையில் நம்பிக்கை வாக்கெடுப்பு கொண்டு வந்த ஹேமந்த், அதில் வெற்றி பெற்றார்.

இந்நிலையில், ஊழல் குற்றச்சாட்டு குறித்து விசாரணைக்கு ராஞ்சியில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகத்தில் முதல்வர் ஹேமந்த் சோரன் நாளை ஆஜராக சம்மன் அனுப்பப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

நெல்லையில் பரபரப்பு... காவல் நிலையம், சோதனைச் சாவடி அருகே பெட்ரோல் குண்டு வீச்சு!

தவெக நிர்வாகிகளை குண்டுக்கட்டாக தூக்கிச் சென்று கைது செய்த போலீசார்!

பெண்கள் மீதான கறை மமதா பானர்ஜி: பாஜக கடும் விமர்சனம்

வா வாத்தியார் படத்தின் புகைப்படங்கள்

தொழிலாளா் வருங்கால வைப்புநிதி விவகாரம்: தற்காலிக தூய்மைப் பணியாளா்கள் பணி புறக்கணிப்பு வாபஸ்

SCROLL FOR NEXT