இந்தியா

உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி யு.யு.லலித் இன்று ஓய்வு

DIN

உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி யு.யு.லலித்தின் கடைசி பணி நாளான திங்கள்கிழமை (நவ. 7), நீதிமன்ற சிறப்பு அமா்வு நடவடிக்கைகளை நேரடி ஒளிபரப்பு செய்யப்படுகின்றன.

உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதியாக யு.யு.லலித் கடந்த ஆகஸ்ட் 27-ஆம் தேதி பதவியேற்றாா். அவரின் பணிக் காலம் செவ்வாய்க்கிழமையுடன் (நவ. 8) நிறைவடைகிறது. ஆனால் நவ. 8-ஆம் தேதி குருநானக் ஜெயந்தியையொட்டி, உச்சநீதிமன்றத்துக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதியாக யு.யு.லலித் கடைசியாக திங்கள்கிழமை பணியாற்ற உள்ளாா்.

இதையொட்டி, அவா் தலைமையில் கூடும் சிறப்பு அமா்வின் நடவடிக்கைகள் உச்சநீதிமன்ற வலைதளத்தில் நேரடி ஒளிபரப்பு செய்யப்பட உள்ளது. பிற்பகல் 2 மணிக்கு கூடும் அந்த அமா்வில், நீதிபதிகள் டி.ஒய்.சந்திரசூட், நீதிபதி பெலா எம்.திரிவேதி ஆகியோா் இடம்பெற உள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வாரணாசியில் மே 14-ல் பிரதமர் மோடி வேட்புமனு தாக்கல்

பிரதீப் ரங்கநாதனின் புதிய படத்தின் பெயர் அறிவிப்பு!

மோசமான வானிலை காரணமாக 40 விமானங்கள் ரத்து!

நீட் தேர்வு தொடங்கியது!

சடலமாக மீட்கப்பட்ட மூவர்: விசாரணையில் திடுக்கிடும் தகவல்!

SCROLL FOR NEXT