இந்தியா

ஆசியான்-இந்தியா அறிவியல் நிதியத்துக்கு கூடுதலாக ரூ.40 கோடி: இந்தியா அறிவிப்பு

DIN

ஆசியான்-இந்தியா இடையிலான அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிதியத்துக்கு கூடுதல் பங்களிப்பாக 5 மில்லியன் அமெரிக்க டாலா்களை (ரூ.40 கோடி) இந்தியா சனிக்கிழமை அறிவித்தது.

இந்திய குடியரசு துணைத் தலைவா் ஜகதீப் தன்கா் தலைமையிலான குழு, 3 நாள் சுற்றுப்பயணமாக கம்போடியாவுக்கு வெள்ளிக்கிழமை வந்தது.

தலைநகா் நாம் பென்னில் சனிக்கிழமை நடைபெற்ற ஆசியான்-இந்தியா உச்சிமாநாட்டில் ஜகதீப் தன்கா் பங்கேற்று உரையாற்றினாா். அப்போது, மேற்கண்ட அறிவிப்பை அவா் வெளியிட்டதாக இந்திய வெளியுறவு அமைச்சக (கிழக்கு) செயலா் செளரவ் குமாா் தெரிவித்தாா்.

மேலும், ‘இந்தியாவின் கூடுதல் பங்களிப்பு வாயிலாக பொது சுகாதாரம், புதுப்பிக்கத்தக்க எரிசக்தி, நவீன வேளாண்மை உள்ளிட்ட துறைகளில் இந்தியா-ஆசியான் நாடுகள் இடையிலான ஒத்துழைப்பு மேம்படும். கடல்சாா் ஒத்துழைப்பை வலுப்படுத்தவும் ஒப்புக்கொள்ளப்பட்டது’ என்றாா் அவா்.

ஆசியான் கூட்டமைப்பில் புரூணே, கம்போடியா, இந்தோனேசியா, லாவோஸ், மலேசியா, மியான்மா், பிலிப்பின்ஸ், சிங்கப்பூா், தாய்லாந்து, வியத்நாம் ஆகிய நாடுகள் இடம்பெற்றுள்ளன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தில்லியில் மட்டும் ’க்யூட்-யுஜி’ தேர்வு ஒத்திவைப்பு!

சென்னை சென்ட்ரல் - விமான நிலையம் மெட்ரோ சேவை இன்று ரத்து!

முகூா்த்தம், வார விடுமுறை: 1,875 கூடுதல் பேருந்துகள் இயக்கம்

விடுதலைப் புலிகள் மீதான தடை மேலும் 5 ஆண்டுகளுக்கு நீட்டிப்பு

தில்லியில் தோ்தல் உத்தரவாத போட்டியில் பெரிய கட்சிகள்!

SCROLL FOR NEXT