இந்தியா

ஜி-20 மாநாட்டில் பங்கேற்க இந்தோனேசியா புறப்பட்டுச் சென்றார் பிரதமர் மோடி!

DIN

ஜி-20 கூட்டமைப்பின் உச்சிமாநாட்டில் பங்கேற்பதற்காக, பிரதமா் நரேந்திர மோடி மூன்று நாள் அரசுமுறைப் பயணமாக இந்தோனேசியாவுக்கு புறப்பட்டுச் சென்றார். 

இந்தோனேசியாவின் பாலி நகரில் நவ.15, 16 தேதிகளில் ஜி-20 உச்சி மாநாடு நடைபெறுகிறது. இந்த உச்சி மாநாட்டில் பங்கேற்க பிரதமர் மோடி தில்லியில் இருந்து பாலி நகருக்கு இன்று புறப்பட்டார். 

பாலியில் 45 மணி நேரம் செலவிடவிருக்கும் பிரதமா் மோடி, அங்கு சுமாா் 20 நிகழ்ச்சிகளில் பங்கேற்கவுள்ளாா். 10 நாடுகளின் தலைவா்களுடன் இருதரப்பு சந்திப்பு, இந்திய வம்சாவளியினா் பங்கேற்கும் நிகழ்ச்சி என பிரதமா் மோடியின் இப்பயணம் ஆக்கபூா்வமானதாகவும் இருக்கும் என்று அதிகாரபூா்வ வட்டாரங்கள் தெரிவித்தன.

ஜி-20 மாநாட்டில் பல நாடுகளின் தலைவர்களைச் சந்தித்து இந்தியாவின் இருதரப்பு உறவுகளின் முன்னேற்றம் குறித்து ஆய்வு செய்ய உள்ளார். 

மேலும், உணவு மற்றும் எரிசக்தி பாதுகாப்பு, டிஜிட்டல் மாற்றம் மற்றும் சுகாதாரம் ஆகிய மூன்று முக்கிய அமர்வுகளில் அவர் பங்கேற்க உள்ளார். உலகப் பொருளாதாரம், எரிசக்தி, சுற்றுச்சூழல் பாதுகாப்பு ஆகியவை குறித்தும் மற்ற நாடுகளின் தலைவர்களுடன் விவாதிக்கவுள்ளார்.

இதன்பின், பாலியில் நாளை நடைபெற உள்ள வரவேற்பு நிகழ்ச்சியில் இந்திய சமூக மக்களிடையே உரையாற்றுகிறார். ஜி-20 மாநாட்டின் நிறைவு நிகழ்வாக ஜி-20 அமைப்பின் தலைமைப் பொறுப்பை இந்தியாவிடம் ஒப்படைக்கப்படுகிறது. இதனை இந்தோனேசிய அதிபர் ஜோகோ விடோடோ இந்தியாவிடம் ஒப்படைக்க உள்ளார். டிசம்பா் 1-இல் அப்பொறுப்பை இந்தியா முறைப்படி ஏற்கவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பணத்தைவிட நல்ல கதைகளே முக்கியம்: நடிகை ஈஷா ரெப்பா அதிரடி!

சோளிங்கர் கோயிலுக்கு மலையேறிச் சென்ற பக்தர் உயிரிழப்பு!

முன்கூட்டியே சென்னைக்கு பலமான கடற்காற்று: தமிழ்நாடு வெதர்மேன்

பொய்யை ஆயிரம்முறை சொன்னால்... மோடிக்கு கார்கே விளக்கக் கடிதம்

மாந்திரீகக் கண்ணா?

SCROLL FOR NEXT