இந்தியா

குஜராத் தேர்தல்: இறுதிக்கட்ட வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட்டது பாஜக!

DIN

குஜராத் சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிடும் 3 வேட்பாளர்கள் அடங்கிய 5-வது பட்டியலை பாஜக இன்று(புதன்கிழமை) வெளியிட்டது. 

குஜராத் மாநிலத்தில் 182 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு டிசம்பர் 1 மற்றும் 5-ஆம் தேதி என இரண்டு கட்டங்களாக வாக்குப் பதிவு நடைபெற உள்ளது. டிசம்பர் 8 ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது.

தேர்தலையொட்டி, குஜராத்தில் பாஜக, காங்கிரஸ், ஆம் ஆத்மி உள்ளிட்ட கட்சிகள் தீவிர தேர்தல் பணிகளில் ஈடுபட்டுள்ளன. இந்த மூன்று கட்சிகளுக்கும் இடையே போட்டி நிலவுகிறது.

முன்னதாக, 182 தொகுதிகளில் 160 வேட்பாளர்கள் கொண்ட முதல் பட்டியலை பாஜக கடந்த வியாழக்கிழமை வெளியிட்டது. அடுத்ததாக 6 வேட்பாளர்கள், ஒரு வேட்பாளர், 12 வேட்பாளர்கள் என அடுத்தடுத்த பட்டியலை வெளியிட்டது. 

182 தொகுதிகளில் 179 தொகுதிகளுக்கான வேட்பாளர்களின் பட்டியல் வெளியாகியுள்ள நிலையில் இன்று 5-வது மற்றும் இறுதிக்கட்ட 3 வேட்பாளர்கள் பட்டியலை பாஜக வெளியிட்டுள்ளது. 

கேரலு, மன்சா, கர்படா ஆகிய 3 தொகுதிகளுக்கு இன்று வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர். இதன் மூலமாக 182 தொகுதிகளுக்கும் பாஜக வேட்பாளர்களை அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அமேதியில் போட்டியிட ராகுலுக்கு விருப்பமில்லை? குழப்பத்தில் காங். தலைமை

எவரெஸ்ட் பயணத்தில் ஜோதிகா!

ஜூன் 1-ல் விக்கிரவாண்டி இடைத்தேர்தல்?

தமிழில் வெல்ல காத்திருக்கும் ஸ்ரீலீலா!

ஆவடி அருகே படுகொலை: வட மாநில இளைஞரின் அதிர்ச்சியூட்டும் வாக்குமூலம்

SCROLL FOR NEXT