பணமோசடி வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட தில்லி அமைச்சா் சத்யேந்தா் ஜெயினின் மனுவை தில்லி நீதிமன்றம் வியாழக்கிழமை தள்ளுபடி செய்தது.
ஊழல் தடுப்புச் சட்டத்தின் கீழ் சிபிஐ பதிவு செய்த எஃப்ஐஆா் அடிப்படையில் பண மோசடி வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள தில்லி அமைச்சர் சத்யேந்தா் ஜெயின் மற்றும் அங்குஷ் ஜெயின் மற்றும் வைபவ் ஜெயின் ஆகியோருக்கு எதிரான வழக்கி தில்லி நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.
இதையும் படிக்க | காங்கிரஸ் ஒற்றுமை நடைப்பயணத்தில் 'தாஜ்மஹால்' பட நடிகை ரியா சென்!
இந்நிலையில் தில்லி அமைச்சர் சத்யேந்தர் ஜெயின் உள்பட மூவரது ஜாமின் மனு மீதான விசாரணை வியாழக்கிழமை தில்லி நீதிமன்றத்தில் நடைபெற்றது. அப்போது ஜாமீன் மனுவை நீதிபதிகள் ரத்து செய்து உத்தரவிட்டனர்.
சமீபத்தில், பணமோசடி வழக்கு தொடா்பாக ஜெயின், அவரது மனைவி மற்றும் 4 நிறுவனங்கள் உள்பட 8 போ் மீது அமலாக்க இயக்குநரகம் தாக்கல் செய்த அரசுத் தரப்பு புகாரை (குற்றப்பத்திரிகை) நீதிமன்றம் விசாரணைக்கு எடுத்துக் கொண்டது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.