பாரம்பரிய நினைவிடங்களுக்கு அனுமதி இலவசம் 
இந்தியா

ஆக்ரா செல்லும் சுற்றுலாப் பயணிகளுக்கு அடிக்கிறது ஜாக்பாட்

ஆக்ராவில் உள்ள பாரம்பரிய நினைவுச் சின்னமாக அறிவிக்கப்பட்டிருக்கும் தளங்களை நவம்பர் 19ஆம் தேதி சுற்றுலாப் பயணிகள் கட்டணமின்றி சுற்றிப்பார்க்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

PTI

ஆக்ரா: ஆக்ராவில் உள்ள தொல்லியல் ஆய்வுத் துறையால் பாரம்பரிய நினைவுச் சின்னமாக அறிவிக்கப்பட்டிருக்கும் தளங்களை நவம்பர் 19ஆம் தேதி சுற்றுலாப் பயணிகள் கட்டணமின்றி சுற்றிப்பார்க்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

உலக பாரம்பரிய வாரம் நவம்பர் 19 - 25 வரை கொண்டாடப்படவிருக்கும் நிலையில், இந்த அறிவிப்பு வெளியாகியிருக்கிறது.

வெளிநாட்டு மற்றும் உள்நாட்டு சுற்றுலாப் பயணிகள் ஆக்ராவில் உள்ள தாஜ் மகால், ஆக்ரா கோட்டை, ஃபதேபூர் சிக்ரி மற்றும் தொல்லியல் துறையின் கட்டுப்பாட்டில் இருக்கும் இதர நினைவுச் சின்னங்களையும் நவம்பர் 19ஆம் தேதி கட்டணமின்றி சுற்றிப் பார்க்கலாம் என்று தொல்லியல் துறை அறிவித்துள்ளது.

ஆனால், தாஜ் மகால் வளாகத்துக்குள் நுழைவதற்கான கட்டணம் மட்டும்தான் இலவசம். அதேவேளையில், தாஜ் மகாலின் நடுவில் இருக்கும் முக்கிய பகுதிக்கு சுற்றுலா பயணிகள் ரூ.200 செலுத்த வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆக்ராவில் உள்ள பல சுற்றுலாத் தலங்களுக்கு சில நூறுகள் வரை கட்டணமாக வசூலிக்கப்படுவதால், நாளை இப்பகுதிக்கு சுற்றுலா செல்ல திட்டமிட்டிருப்பவர்களும், சுற்றுலா செல்பவர்களுக்கும் இது நிச்சயம் ஒரு ஜாக்பாட்தான்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தீபாவளி வருகிறது! 70% சலுகையில் பட்டாசு என்ற விளம்பர மோசடி!

தீர்ப்பு எதிரொலி: முதுநிலை ஆசிரியர் தேர்வு தொடங்கியது!

பாகிஸ்தான் மீது ஆப்கானிஸ்தானின் தலிபான்கள் தாக்குதல்! 12 பேர் பலி!

மேட்டூர் அணை நீர்மட்டம் உயர்வு!

மின்னல் தாக்கி சிகிச்சையிலிருந்த சிறுவன் பலி!

SCROLL FOR NEXT