இந்தியா

மோடி கல்பவிருட்சம், கேஜரிவால் சீமைக்கருவேலம், ராகுல்.. ஷிவ்ராஜ் சிங் பேச்சு

PTI


கட்ச்: குஜராத் மாநிலத்தில் இன்று நடைபெற்ற பாஜக பொதுக் கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய மத்தியப் பிரதேச மாநில முதல்வர் ஷிவ்ராஜ் சிங் சௌஹான், கேஜரிவால் சீமைக்கருவேல மரம், ராகுல் புள் புதர் என்று விமரிசித்துள்ளார்.

இவை விவசாயத்துக்கு உதவாது என்றும், விவசாயத்தை நாசப்படுத்தும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

அதோடு நின்றுவிடாமல், பிரதமர் நரேந்திர மோடியை கல்பவிருட்சம் என்று பெருமையாகக் குறிப்பிட்ட ஷிவ்ராஜ் சிங் சௌஹான், மக்கள் என்ன வேண்டுமோ அதனை அவரிடம் கேட்டுப் பெற்றுக் கொள்ளலாம் என்றும் கூறினார்.

தேர்தல் அறிவிக்கப்பட்டிருக்கும் குஜராத்தில், ஆயிரக்கணக்கான மக்கள் மத்தியில் பேசிய சௌஹான் இவ்வாறு பேசி, பாஜகவினரின் கைதட்டலை அள்ளினார்.

மேலும் அவர் பேசுகையில், காங்கிரஸ் கட்சியும், ஆம் ஆத்மியும் நாட்டின் நிறைவையும் அமைதியை அழித்துவிடுவார்கள். நாட்டுக்காக அனைத்தையும் இழந்தவர் வீர் சாவர்க்கர். ஆனால் அவரை ராகுல் அவமதித்துவிட்டார். விடுதலைப் போராட்ட வீரரை ராகுல் அவமதித்துவிட்டார். இந்த நாடு அவரை எப்போதும் மன்னிக்காது என்றும் சௌஹான் கூறியுள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மோடிக்கு எதிராக செல்வப்பெருந்தகை வழக்கு

தக் லைஃபில் அசோக் செல்வன்!

தொடரும் ஷவர்மா மரணங்கள்: மும்பையில் இளைஞர் பலி!

ஜெயக்குமார் மரணம்: தடயங்கள் கிடைக்காமல் திணறும் காவல்துறை

நடுவருடன் வாக்குவாதம்: சஞ்சு சாம்சனுக்கு அபராதம்!

SCROLL FOR NEXT