இந்தியா

'மங்களூரில் ஆட்டோவில் வெடித்தது...': காவல்துறை அதிர்ச்சி தகவல்

மங்களூரு ஆட்டோ  குண்டுவெடிப்பு சம்பவம் தீவிரவாத செயல்தான் என்று கர்நாடக  டிஜிபி பிரவீன் சூட் உறுதியாக தெரிவித்துள்ளார்.

DIN

மங்களூரு ஆட்டோ  குண்டுவெடிப்பு சம்பவம் தீவிரவாத செயல்தான் என்று கர்நாடக  டிஜிபி பிரவீன் சூட் உறுதியாக தெரிவித்துள்ளார்.

மங்களூரில் கரோடி அருகே ஆட்டோவில் வெடி  வெடித்து சிதறிய விவகாரத்தில், மத்திய புலனாய்வு அமைப்புகளுடன் மாநில காவல் துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள். 

மேலும், இந்த சம்பவம் ஒரு தீவிரவாத செயலாகும். இதுகுறித்து தீவிரமாக விசாரணை நடைபெற்று வருகிறது என்று கர்நாடக டிஜிபி பிரவீன் சூட் தெரிவித்தார்.

கர்நாடக மாநிலம் மங்களூரு நகரில் நேற்று மாலை ஆட்டோவில் சென்ற பயணி கொண்டு வந்த குக்கர் பார்சலுக்குள் வெடிகுண்டுகள் இருந்தது உறுதியாகி உள்ளது. தடயவியல் நிபுணர்கள் சோதனை நடத்தியதில் வெடிகுண்டு தயாரிப்பதற்கு பயன்படுத்தக்கூடிய வயர்கள், பேட்டரிகள் உள்ளிட்ட பல்வேறு பொருள்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது. 

மேலும், ஆட்டோவில் பயணித்த பயணி தன் அடையாளங்களை மறைத்துள்ளார். தன் பெயர் பிரேம் ராஜ் என்று கூறினாலும் அடையாள அட்டையில் வேறு பெயராக உள்ளது.  அவர் பலத்த காயமடைந்து சிகிச்சை பெற்று வருகிறார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மீன் உற்பத்தியில் 103% வளா்ச்சி: மத்திய அமைச்சா் பெருமிதம்

கால்பந்து ஜாம்பவான் மெஸ்ஸி இந்தியா வருகை

கொலம்பியா முன்னாள் அதிபருக்கு 12 ஆண்டுகள் வீட்டுச் சிறை

தமிழகத்தில் இன்றும் நாளையும் பலத்த மழை எச்சரிக்கை!

ரஷிய முன்னாள் அதிபரின் போா் மிரட்டல் எதிரொலி - அணுசக்தி நீா்மூழ்கிக் கப்பல்களை அனுப்ப டிரம்ப் உத்தரவு

SCROLL FOR NEXT