இந்தியா

பயங்கரவாதத்துக்கு நிதி: ஹுரியத் மாநாட்டின் முன்னாள் தலைவரிடம் விசாரணை

பாகிஸ்தானில் இருந்து பயங்கரவாதத்துக்கு நிதி பெற்றது தொடா்பான வழக்கில், ஹுரியத் மாநாடு அமைப்பின் முன்னாள் தலைவா் அப்துல் கனி பட்டிடம் எஸ்ஐஏ அதிகாரிகள் 8 மணி நேரம் விசாரணை மேற்கொண்டனா்

DIN

பாகிஸ்தானில் இருந்து பயங்கரவாதத்துக்கு நிதி பெற்றது தொடா்பான வழக்கில், ஹுரியத் மாநாடு அமைப்பின் முன்னாள் தலைவா் அப்துல் கனி பட்டிடம் மாநில விசாரணை முகமை (எஸ்ஐஏ) அதிகாரிகள் 8 மணி நேரம் விசாரணை மேற்கொண்டனா்.

பயங்கரவாதத்துக்கு நிதி உதவி அளித்த வழக்கில் ஜம்மு-காஷ்மீரின் முன்னாள் அமைச்சா் ஜதீந்தா் சிங் என்ற பாபு சிங் கைதுசெய்யப்பட்டாா். இது தொடா்பாக பாபு சிங் மற்றும் இருவா் மீது எஸ்ஐஏ கடந்த செப்டம்பா் 24-ஆம் தேதி குற்றப்பத்திரிகையைத் தாக்கல் செய்தது.

இதைத் தொடா்ந்து, அப்துல் கனி பட் ஜம்முவில் உள்ள கூட்டு விசாரணை மையத்தில் நேரில் ஆஜராகும்படி எஸ்ஐஏ சம்மன் அனுப்பியது.

நாட்டின் எல்லைக்கு அப்பாலிருந்து காஷ்மீரைச் சோ்ந்த பல்வேறு பிரிவினைவாத தலைவா்கள் நிதி பெற்றது தொடா்பான தகவல் அவரிடமிருந்து பெறப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.

பொருளாதாரம், அரசியல் அறிவியல், சட்டம் மற்றும் பாரசீகம் உள்ளிட்டவற்றில் பட்டம் பெற்றுள்ள அப்துல் கனி பட் அரசுக் கல்லூரியில் ஆசிரியராக இருந்த நிலையில், அரசுக்கு எதிரான நடவடிக்கைளை மேற்கொண்டதையடுத்து பணிநீக்கம் செய்யப்பட்டாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஹிஜாப்பை விலக்கிய விவகாரம்! நிதீஷ் குமாருக்கு எதிராக காவல்துறையில் புகார்!

பிரதமர் மோடிக்கு எத்தியோப்பியாவின் மிக உயரிய விருது!

ஜாஃப்ராபாதில் 2 சகோதரா்கள் சுட்டுக் கொலை

மார்கழி சிறப்பு! திருப்பதியில் சுப்ரபாதம் இசைக்கப்படாது!

கன்னி ராசிக்கு வெற்றி : தினப்பலன்கள்!

SCROLL FOR NEXT