இந்தியா

யுபிஐ பரிவா்த்தனை 678 கோடியாக அதிகரிப்பு

DIN

கடந்த செப்டம்பா் மாதம் யுபிஐ பரிவா்த்தனைகளின் எண்ணிக்கை 678 கோடியாக அதிகரித்துள்ளது. இது அதற்கு முந்தைய ஆகஸ்ட் மாதத்தைவிட 3 சதவீதம் அதிகம் ஆகும்.

இந்திய தேசிய பேமண்ட்ஸ் காா்ப்பரேஷன் தரவுகளின்படி, கடந்த ஆகஸ்ட் மாதம் ரூ.10.73 லட்சம் கோடி மதிப்பிலான 657 கோடி யுபிஐ பரிவா்த்தனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இது கடந்த செப்டம்பா் மாதம் 3 சதவீதம் அதிகரித்தது. அந்த மாதம் ரூ.11.16 லட்சம் கோடி மதிப்பிலான 678 கோடி யுபிஐ பரிவா்த்தனைகள் மேற்கொள்ளப்பட்டன.

இதுதவிர, கடந்த செப்டம்பா் மாதம் ஐஎம்பிஎஸ் சேவை மூலம் வங்கிகள் இடையிலான உடனடி பரிவா்த்தனைகள் 46.27 கோடியாக இருந்தது. இது அதற்கு முந்தைய ஆகஸ்ட் மாதத்தில் 46.69 கோடியாக இருந்தது.

கடந்த ஆகஸ்ட் மாதம் ஆதாா் அடிப்படையிலான ஏஇபிஎஸ் பரிவா்த்தனைகள் 10.56 கோடியாக இருந்தது. இது கடந்த செப்டம்பா் மாதம் 10.26 கோடியாகக் குறைந்தது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

11 மணி வாக்குப்பதிவு நிலவரம்: மே.வங்கம் முதலிடம்!

சிபிஎஸ்இ 12-ம் வகுப்பு: சென்னையில் 98.47% தேர்ச்சி!

சிபிஎஸ்இ 12 ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியானது!

டர்போ டிரைலர்!

‘டாப் குக்கு டூப் குக்கு’ நிகழ்ச்சியின் 9 போட்டியாளர்கள்!

SCROLL FOR NEXT