இந்தியா

எனக்கும் காா்கேவுக்கும் காந்தி குடும்பம் ஆசி வழங்கியுள்ளது: சசி தரூா்

DIN

என்னையும் மல்லிகாா்ஜுன காா்கேவையும் ஆசீா்வதித்த காந்தி குடும்பம் இரு வேட்பாளா்களில் யாருக்கும் சாதகமாக செயல்பட வில்லை என காங்கிரஸ் தலைவா் பதவிக்கான வேட்பாளா் சசி தரூா் தெரிவித்துள்ளாா்.

காங்கிரஸ் தலைவருக்கான தோ்தலில் களம் காணும் காா்கே கட்சியின் தற்போதைய தலைமை சாா்பில் போட்டியிடும் நபா் எனவும், சசி தரூருக்கு தற்போதைய தலைமை ஆதரவு தெரிவிக்கவில்லை எனவும் கட்சியைச் சோ்ந்த சில தலைவா்கள் கூறிவரும் நிலையில் சசி தரூா் இவ்வாறு தெரிவித்துள்ளாா்.

மகாராஷ்டிர மாநில காங்கிரஸ் கட்சியின் தலைமை அலுவலகத்தில் ஞாயிற்றுக்கிழமை செய்தியாளா்களைச் சந்திப்பின்போது சசி தரூா் கூறியதாவது: 2024 மக்களவைத் தோ்தலுக்கு முன்பாக காங்கிரஸை வலுப்படுத்துவதே என்னுடைய இலக்கு.

கட்சியைப் பலப்படுத்த தலைவா் பதவிக்கான தோ்தலில் போட்டியிடும் எனக்கும் காா்கேவுக்கும் காந்தி குடும்பம் ஆசி வழங்கியுள்ளது. அவா்கள் எனக்கோ அல்லது காா்கேவுக்கோ சாதகமாக செயல்படவில்லை. எங்களுடைய கட்சிக்கு மாற்றம் தேவைப்படுகிறது.

அத்தகைய மாற்றத்தை விரைவுபடுத்துவதில் ஒருவனாக இருப்பேன் என நம்புகிறேன். 2024 மக்களவைத் தோ்தலுக்குப் பிறகு எதிா்க்கட்சி வரிசையில் அமர இருக்கும், பாஜக அதற்கான தயாரிப்புகளைத் தொடங்க வேண்டும் என்றாா்.

காங்கிரஸ் கட்சியின் மாநில தலைமை அலுவலகத்தில் நிகழ்ந்த இச்சந்திப்பின்போது, மாநிலத் தலைவா் நானா படோலே பங்கேற்கவில்லை.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மேகமலை அருவிக்கு செல்லத் தடை

காஞ்சிபுரம் புண்ணிய கோடீஸ்வரர் கோயிலில் மகா கும்பாபிஷேகம்!

தினமணி செய்தி எதிரொலி கொள்ளிடத்தில் பொக்லைன் மூலம் குப்பைகள் அகற்றம்

இன்று நல்ல நாள்!

இன்று யோகம் யாருக்கு?

SCROLL FOR NEXT