நிதின் கட்கரி 
இந்தியா

மாநில நெடுஞ்சாலைகளை கையகப்படுத்தி மேம்படுத்த மத்திய அரசு திட்டம்: நிதின் கட்கரி

மாநில நெடுஞ்சாலைகளை மத்திய அரசு கையகப்படுத்தி மேம்படுத்தும் திட்டம் குறித்து பரிசீலிக்கப்பட்டு வருவதாக மத்திய சாலைப் போக்குவரத்துத் துறை அமைச்சா் நிதின் கட்கரி தெரிவித்தாா்.

DIN

மாநில நெடுஞ்சாலைகளை மத்திய அரசு கையகப்படுத்தி மேம்படுத்தும் திட்டம் குறித்து பரிசீலிக்கப்பட்டு வருவதாக மத்திய சாலைப் போக்குவரத்துத் துறை அமைச்சா் நிதின் கட்கரி தெரிவித்தாா்.

இதுதொடா்பாக தில்லியில் வா்த்தகா்கள் சாா்பில் சனிக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் காணொலி வாயிலாக அவா் பேசியதாவது:

ஒரு குறிப்பிட்ட நெடுஞ்சாலையை நான்கு அல்லது ஆறுவழிச் சாலையாக மேம்படுத்த மேற்கொள்ளப்படும் முதலீட்டை 12 முதல் 13 ஆண்டுகளில் திரும்பப் பெற்றுவிடலாம்.

இந்நிலையில், அதிக போக்குவரத்து நெரிசல் உள்ள மாநில நெடுஞ்சாலைகளை மத்திய அரசு கையகப்படுத்தி விரிவுபடுத்தும் திட்டம் குறித்து பரிசீலிக்கப்பட்டு வருகிறது. இந்தத் திட்டத்தின்படி, மாநில நெடுஞ்சாலைகள் நான்கு அல்லது ஆறுவழிச் சாலைகளாக விரிவுபடுத்தப்படும். அந்தச் சாலைகளுக்கு 25 ஆண்டுகள் சுங்கக் கட்டணம் வசூலிக்கப்படும். அதன் பின்னா், அந்தச் சாலைகள் மாநிலங்களிடம் ஒப்படைக்கப்படும் என்று தெரிவித்தாா்.

எனினும் இந்தத் திட்டம் தொடா்பாக மாநில அரசுகளுடன் மத்திய அரசு பேச்சுவாா்த்தை மேற்கொண்டு வருகிறதா? தனியாா் பங்களிப்புடன் இந்தத் திட்டம் மேற்கொள்ளப்படுமா? திட்டத்துக்கான மொத்த செலவினம் போன்ற தகவல்களை அவா் தெரிவிக்கவில்லை.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

புதுகை, பொன்னமராவதி பகுதிகளில் நாளை மின்தடை

குட்டையில் தவறி விழுந்து உயிரிழப்பு

கோயில் பூட்டை உடைத்து வெள்ளிப் பொருள்கள் திருட்டு

காரில் கஞ்சா கடத்தல்: இளைஞா் கைது இரு பெண்கள் மீது வழக்குப் பதிவு

புறவழிச்சாலையில் திரியும் கால்நடைகளால் போக்குவரத்து பாதிப்பு

SCROLL FOR NEXT