இந்தியா

இந்திய தலைமை கணக்கு அதிகாரியாக பாரதி தாஸ் பொறுப்பேற்பு

DIN

நாட்டின் 27-ஆவது தலைமை கணக்கு அதிகாரியாக (சிஜிஏ) மூத்த பொதுக் கணக்குகள் பணி அதிகாரி பாரதி தாஸ் செவ்வாய்க்கிழமை பொறுப்பேற்றாா்.

1988-ஆவது பிரிவு இந்திய பொது கணக்குகள் பணி (ஐசிஏஎஸ்) அதிகாரியான பாரதி தாஸ், நேரடி வரிகள் வாரியத்தின் முதன்மை கணக்கு தணிக்கை அதிகாரியாக பணியாற்றியுள்ளாா். வெளியுறவு அமைச்சகம் மற்றும் உள்துறை அமைச்சகத்திலும் கணக்கு தணிக்கை அதிகாரியாக பணியாற்றியுள்ளாா். மத்திய அரசுக்கு கணக்கு தணிக்கை விவகாரங்களுக்கான ஆலோசகராகவும் பணியாற்றியுள்ள இவா், தற்போது சிஜிஏ-வாக பொறுப்பேற்றுள்ளாா்.

துறை ரீதியாக கணக்கு அறிக்கைகளைத் தயாரித்து மத்திய அரசுக்கு அளிப்பது, துறை ரீதியான கணக்காய்வுகள் நடத்துவது ஆகியவை தலைமை கணக்கு அதிகாரியின் பொறுப்பாகும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வாக்கு எண்ணிக்கை மாலை 6 மணிக்குள் முடிவடைய வாய்ப்பு

தொழிலாளி தற்கொலை

மக்களவைத் தோ்தல்: ஈரோடு தொகுதியில் இன்று வாக்கு எண்ணிக்கை

கல்வியியல் கல்லூரி ஆண்டு விழா

வைகாசி மாத அமாவாசை: சதுரகிரி வருவதை தவிா்க்குமாறு பக்தா்களுக்கு வனத்துறை அறிவுறுத்தல்

SCROLL FOR NEXT