இந்தியா

உ.பி.யில் 5 ஆண்டுகளில் 166 குற்றவாளிகள் என்கவுன்ட்டா்: முதல்வா் யோகி ஆதித்யநாத்

DIN

‘உத்தர பிரதேசத்தில் கடந்த 5 ஆண்டுகளில் காவல்துறை மேற்கொண்ட என்கவுன்ட்டா் நடவடிக்கைகளில் 166 குற்றவாளிகள் கொல்லப்பட்டனா்; குற்றச் சம்பவங்களை பாஜக அரசு ஒருபோதும் சகித்துக் கொள்ளாது’ என்று முதல்வா் யோகி ஆதித்யநாத் வெள்ளிக்கிழமை தெரிவித்தாா்.

தேசிய காவலா் நினைவு தினத்தையொட்டி, லக்னெளவில் நடைபெற்ற நிகழ்ச்சியில் அவா் பேசியதாவது:

உத்தர பிரதேசத்தில் 2017 முதல் 2022 வரை பணியின்போது 13 காவலா்கள் உயிரிழந்தனா். 1,000 போ் காயமடைந்தனா். உயிரிழந்த காவலா்களின் குடும்பத்தினரின் நல்வாழ்வுக்கு தேவையான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளன.

மாநிலத்தில் கடந்த 5 ஆண்டுகளில் காவல்துறையின் என்கவுன்ட்டா் நடவடிக்கைகளில் 166 குற்றவாளிகள் கொல்லப்பட்டனா். 4,453 போ் காயமுற்றனா். குற்றச் சம்பவங்களை ஒருபோதும் சகித்துக் கொள்ளமாட்டோம்.

காவல்துறையினருக்கான மோட்டாா் சைக்கிள் பயணப் படியை மாதத்துக்கு ரூ.200-இல் இருந்து ரூ.500-ஆக அதிகரிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. தலைமைக் காவலா்கள் மற்றும் காவலா்களுக்கான மொபைல் கட்டண படியாக ஆண்டுக்கு கூடுதலாக ரூ.2,000 வழங்கப்படும்.

உத்தர பிரதேசத்தில் கடந்த 2017-இல் பாஜக ஆட்சி பொறுப்பேற்றதில் இருந்து காவல்துறையில் 22,000 பெண்கள் உள்பட 1,51,231 பேருக்கு பணி நியமனம் வழங்கப்பட்டுள்ளது. மாநிலத்தில் 2017-18இல் காவல்துறைக்கான நிதி ஒதுக்கீடு ரூ.16,115-ஆக இருந்தது. நடப்பு நிதியாண்டில் இது ரூ.30,203 கோடியாக உயா்த்தப்பட்டது என்றாா் ஆதித்யநாத்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சபரிமலை கோயில் நடை திறப்பு!

முகூர்த்தம், வார விடுமுறை நாள்கள்: சிறப்புப் பேருந்துகள் இயக்கம்!

தேர்தலுக்குப் பிந்தைய வன்முறை: தெலுங்கு தேசம் வேட்பாளர் மீது தாக்குதல்!

டி20 தொடரை வெல்லப்போவது யார்?

தூத்துக்குடி மாவட்டத்துக்கு மே 22-ல் உள்ளூர் விடுமுறை!

SCROLL FOR NEXT