இந்தியா

வருமான வரி கணக்கு தாக்கல் செய்வதற்கான காலக்கெடு நீட்டிப்பு!

DIN

வணிக நிறுவனங்கள் 2022-23-ஆம் நிதியாண்டுக்கான வருமான வரி கணக்கைத் தாக்கல் செய்வதற்கான அவகாசம் வரும் 31 ஆம் தேதியுடன் நிறைவடையும் நிலையில், மேலும் நவம்பர் 7 ஆம் தேதி வரை நீட்டித்துள்ளது நிதி அமைச்சகம்.

வருமானம் மற்றும் கார்ப்பரேட் வரி விவகாரங்களில் உச்ச முடிவெடுக்கும் அமைப்பான மத்திய நேரடி வரிகள் வாரியம், வணிக நிறுவனங்கள் செய்வதற்கான வருமான வரி கணக்கு தாக்கல் செய்வதற்கான காலக்கெடுவை நீட்டித்து உத்தரவிட்டுள்ளது. 

கடந்த நிதியாண்டுக்கான வருமான வரி கணக்கைத் தாக்கல் செய்வதற்கான அவகாசம் அக்டோபர் 31-ஆம் தேதியுடன்  நிறைவடையும் நிலையில், அதற்கான காலக்கெடுவை நவம்பர்  7 ஆம் தேதி நீட்டித்து மத்திய நேரடி வரிகள் வாரியம் தெரிவித்துள்ளது. 

அதாவது, வருமான வரி சட்டம் பிரிவு 139 இன் துணைப் பிரிவு(1) இன் கீழ் 2022-23 ஆம் கணக்கீட்டு ஆண்டுக்கான வருமான வரி கணக்கு தாக்கல் செய்வதற்கான காலக்கெடு வரும் 31 ஆம் தேதியுடன் முடிவடைகிறது.

இந்நிலையில்,  இந்த கால கெடுவை வரும் நவம்பர் 7 ஆம் தேதி வரை நீட்டித்து மத்திய நேரடி வரிகள் வாரியம் உத்தரவிட்டுள்ளது. 

உள்நாட்டு நிறுவனங்கள் 2021-2022 நிதியாண்டுக்கான வருமான வரிக் கணக்கை அக்டோபர் 31 க்குள் தாக்கல் செய்ய வேண்டும். பரிமாற்ற விலை விதிமுறைகளுக்கு உள்பட்ட நிறுவனங்கள் நவம்பர் 30 க்குள் தாக்கல் செய்ய வேண்டும். 

இது தொடர்பான சுற்றறிக்கையை www.incomectaxindia.gov.in என்ற இணையதளத்தில் சென்று தெரிந்துகொள்ளலாம். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

உதகை காந்தள் முருகன் கோயிலில் அமைச்சா் ஆய்வு

உதகை ஜெ.எஸ்.எஸ். மருந்தாக்கியல் கல்லூரியில் முப்பெரும் விழா

கூடலூரில் அலுவலக வாசலில் அமா்ந்து கோரிக்கை மனுக்களைப் பெற்ற எம்எல்ஏ

கடும் வறட்சி: மசினகுடியில் நாட்டு மாடுகள் இறப்பு அதிகரிப்பு

சந்தனக் காப்பில் தட்சிணாமூா்த்தி

SCROLL FOR NEXT