இந்தியா

கர்நாடக மடாதிபதிக்கு நீதிமன்றக் காவல் செப். 14 வரை நீட்டிப்பு!

பாலியல் புகாரில் கைது செய்யப்பட்ட கர்நாடக மாநில முருக மடத்தின் மடாதிபதி சிவமூா்த்தி முருகா சரணருவுக்கு நீதிமன்றக் காவல் செப்டம்பர் 14 ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. 

DIN

பாலியல் புகாரில் கைது செய்யப்பட்ட கர்நாடக மாநில முருக மடத்தின் மடாதிபதி சிவமூா்த்தி முருகா சரணருவுக்கு நீதிமன்றக் காவல் செப்டம்பர் 14 ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. 

பள்ளிச் சிறுமிகள் இருவா் அளித்த பாலியல் புகாரின் பேரில் கைது செய்யப்பட்ட கா்நாடக மாநில முருக மடத்தின் மடாதிபதி சிவமூா்த்தி முருகா சரணருவை திங்கள்கிழமை (செப். 5) வரை போலீஸ் காவலில் சிறையில் அடைக்க உள்ளூா் நீதிமன்றம் வெள்ளிக்கிழமை உத்தரவிட்டது.

மேலும், சட்டத்தின்படி மடாதிபதியிடம் விசாரணையை மேற்கொள்ள போலீஸாருக்கு முழுச் சுதந்திரம் வழங்கப்பட்டுள்ளதாக மாநில முதல்வா் பசவராஜ் பொம்மை கூறினார். 

அதன்படி, சித்ரதுர்காவில் உள்ள மாவட்ட துணை காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் வைத்து மடாதிபதியிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இதையடுத்து அவரது நீதிமன்றக் காவல் இன்றுடன்(செப்.5) முடிவடைந்த நிலையில் மீண்டும் இன்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். தொடர்ந்து சித்ரதுர்கா நீதிமன்றம் அவரது நீதிமன்றக் காவலை செப்டம்பர் 14 ஆம் தேதி வரை நீட்டித்தது. 

இதனிடையே, ஜாமீன் கோரி கர்நாடக நீதிமன்றத்தில் மடாதிபதி தரப்பில் தாக்கல் செய்யப்பட்டுள்ள மனு இன்று விசாரணைக்கு வருகிறது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பாமக எம்எல்ஏ அருள் சென்ற காரை வழிமறித்து தாக்குதல்! அன்புமணி காரணமா?

பிகார் தேர்தலில் ராகுலின் தாக்கம் பெரிய பூஜ்ஜியம்: ரிதுராஜ் சின்ஹா

கலை சுதந்திரமா? வன்முறை வணிகமா? கேள்விக்குள்ளாகும் லோகேஷ் - அருண் மாதேஸ்வரன்!

10, 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு அட்டவணை! அமைச்சர் அன்பில் மகேஸ் வெளியிட்டார்!

2026 பொங்கல் பண்டிகை! அரசு விரைவுப் பேருந்துகளில் முன்பதிவு தொடக்கம்!!

SCROLL FOR NEXT