பஞ்சாபில் உள்ள தனியார் பள்ளிக்கு வெடிகுண்டு மிரட்டல் வந்ததையடுத்து அங்கு காவல்துறை பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸில் உள்ள தனியார் பள்ளியின் முதல்வருக்கு இன்ஸ்டாகிராம் மூலமாக பள்ளியில் துப்பாக்கிச்சூடு மற்றும் வெடிகுண்டு மிரட்டல் வந்துள்ளது.
இதையடுத்து அவர் காவல்துறையில் தகவல் தெரிவிக்க, தனியார் பள்ளிக்கு வெளியே பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது.
இதன்பின்னர் இதுகுறித்து காவல்துறை விசாரிக்க, பள்ளியைச் சேர்ந்த 3 மாணவர்கள் தங்களது இன்ஸ்டாகிராம் ஐடி மூலமாக அவ்வாறு அனுப்பியுள்ளது தெரிய வந்துள்ளது. தகவலை ஆங்கிலம் மற்றும் உருதுவில் அனுப்பியுள்ளனர். பள்ளி முதல்வரின் வேண்டுகோளின்படி நடவடிக்கை எடுப்போம் என அமிர்தசரஸ் டிசிபி தெரிவித்துள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.