இந்தியா

பிரபல இசையமைப்பாளர், பாடகர் பூபேன் ஹஸாரிகாவை கௌரவித்த கூகுள்!

பிரபல இசையமைப்பாளர், பாடகர் பூபேன் ஹஸாரிகாவின் பிறந்தநாளையொட்டி சிறப்பு கவன ஈர்ப்புச் சித்திரத்தை வெளியிட்டுள்ளது கூகுள்.  

DIN

பிரபல இசையமைப்பாளர், பாடகர் பூபேன் ஹஸாரிகாவின் பிறந்தநாளையொட்டி சிறப்பு கவன ஈர்ப்புச் சித்திரத்தை வெளியிட்டுள்ளது கூகுள்.  

பிரபல தேடுபொறி நிறுவனமான கூகுள், உலகம் முழுவதும் உள்ள பிரபலங்களை கௌரவிக்கும்பொருட்டு அவர்களது பிறந்த நாளில்/நினைவு நாளில்/சாதனை நாளில் சிறப்பு கவன ஈர்ப்புச் சித்திரத்தை வெளியிட்டு வருகிறது. 

அந்தவகையில் அசாம் மாநிலத்தைச் சேர்ந்த பிரபல பின்னணி இசைப் பாடகர் பூபேன் ஹஸாரிகாவின் 96 ஆவது பிறந்தநாளையொட்டி சிறப்பு கவன ஈர்ப்புச் சித்திரத்தை கூகுள் வெளியிட்டுள்ளது. 

1926 செப்டம்பர் 8ல் பிறந்த பூபேன் ஹஸாரிகா 10 வயதில் இசைத் துறைக்கு வந்தவர். அசாமைச் சேர்ந்த இவர் தனது 10 ஆவது வயதில் அசாமிய மொழித் திரைப்படமான ஜோய்மோதி என்ற திரைப்படத்தில் முதல்முறையாக எழுதிப் பாடினார். தனது 12 வயதில் இந்திரமாலதி என்ற படத்தில் பாடினார். இதுவரை 100க்கும் மேற்பட்ட படங்களுக்கு இசையமைத்துள்ளார். 

இசையமைப்பாளர், பாடகர், பாடலாசிரியர், இயக்குநர், தயாரிப்பாளர் என இவரது பன்முகத் திறமை, அசாம் திரையுலகின் வளர்ச்சிக்கு பெரிதும் உதவியுள்ளன. பத்ம ஸ்ரீ, பத்ம பூஷண் உள்ளிட்ட விருதுகளையும் நாட்டின் உயரிய விருதான பாரத ரத்னாவை கடந்த 2019லும் பெற்றுள்ளார். 1992ல் தாதாசாகெப் பால்கே விருதையும் தேசிய விருதையும் பெற்றுள்ளார்.  

இந்திய அரசின் தேசிய திரைப்பட மேம்பாட்டுக் கழகம் உள்பட பல வாரியங்கள் மற்றும் சங்கங்களின் தலைவராகவும் இயக்குனராகவும் பணியாற்றியுள்ளார். 

2011 நவம்பர் 5 ஆம் தேதி தனது 85 ஆவது வயதில் மறைந்தார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

‘அரபு நேட்டோ கூட்டமைப்பு' உருவாகிறதாம்: முஸ்லிம் நாடுகள் ஒருமித்த முடிவு!

மயிலாடுதுறை இளைஞர் ஆணவக்கொலை: காதலி பரப்பரப்புப் பேட்டி!

பிரதமர் மோடியின் பிறந்தநாள் ஒரு கருப்பு நாள்: காங்கிரஸ் எம்பி விமர்சனம்!

எதிர்நீச்சலை பின்னுக்குத்தள்ளிய சிறகடிக்க ஆசை! டிஆர்பி பட்டியல் வெளியீடு!

ஓடிடியில் மதராஸி எப்போது?

SCROLL FOR NEXT