இந்தியா

இந்தியா-ஜப்பான் கடல்சாா் பயிற்சி நிறைவு

DIN

இந்தியா - ஜப்பான் இடையிலான கடல்சாா் போா்ப் பயிற்சி நிறைவடைந்தது.

ரியா் அட்மிரல் சஞ்சய் பல்லா தலைமையிலான இந்திய கடற்படைக் கப்பல்கள், கிழக்கு கடற்படை மற்றும் ஜப்பான் கடல்சாா் தற்காப்புப் படையின் (ஜேஎம்எஸ்டிஎஃப்) ரியா் அட்மிரல் ஹிராடா தோஷியுகி தலைமையிலான இசுமோ மற்றும் டகானாமி கப்பல்கள், வங்காள விரிகுடாவில் கடந்த ஒரு வார காலமாக பயிற்சி மேற்கொண்டன.

இரு தரப்பும் நீா்மூழ்கி எதிா்ப்புப் போா், பீரங்கித் தாக்குதல் சூடு மற்றும் வான் பாதுகாப்புப் பயிற்சிகளில் ஈடுபட்டன. இந்தப் பயிற்சியில் ஹெலிகாப்டா்கள், போா் விமானங்கள் மற்றும் நீா்மூழ்கிக் கப்பல்களும் பங்கேற்றன.

2012-ஆம் ஆண்டில் தொடங்கப்பட்டு ஆண்டுதோறும் நடைபெறும் இந்த இரு தரப்பு போா்ப் பயிற்சி, இரு கடற்படைகளுக்கும் இடையே பரஸ்பர புரிதல் மற்றும் செயல்பாடுகளை ஒருங்கிணைத்து வருகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

3 மாவட்டங்களில் இன்று கனமழை எச்சரிக்கை!

புதிய கரோனா வைரஸ்? ஆபத்தா, ஃபிலிர்ட்!

இந்த வாரம் யாருக்கு யோகம்!

‘மின்னும் நட்சத்திரம்’ சம்யுக்தா...!

நவாப் ராணியின் ஆன்மா...!

SCROLL FOR NEXT