ராஜு ஸ்ரீவஸ்தவா (கோப்புப் படம்) 
இந்தியா

உ.பி. பேரவை: நகைச்சுவை நடிகர் மறைவுக்கு 2 நிமிடங்கள் மெளன அஞ்சலி

மறைந்த பாலிவுட் நகைச்சுவை நடிகர் ராஜு ஸ்ரீவஸ்தவாவை கெளரவிக்கும் விதமாக உத்தரப் பிரதேச சட்டப்பேரவையில் 2 நிமிடங்களுக்கு மெளன அஞ்சலி செலுத்தப்பட்டது. 

DIN

மறைந்த பாலிவுட் நகைச்சுவை நடிகர் ராஜு ஸ்ரீவஸ்தவாவை கெளரவிக்கும் விதமாக உத்தரப் பிரதேச சட்டப்பேரவையில் 2 நிமிடங்களுக்கு மெளன அஞ்சலி செலுத்தப்பட்டது. 

பாலிவுட்டில் பிரபல நகைச்சுவை நடிகரான ராஜு ஸ்ரீவஸ்தவா (58) உடல் நலக்குறைவு காரணமாக புதன்கிழமை இன்று (செப்.21) காலமானார்.

கடந்த ஆகஸ்ட் 10 ஆம் தேதி உடற்பயிற்சி கூடத்தில் பயிற்சி செய்துகொண்டிருக்கும்போது திடீரென நெஞ்சு வலி ஏற்பட்டு மயங்கி விழுந்தார்.  இதனைத் தொடர்ந்து தில்லியிலுள்ள எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்தார். எனினும் அவர் சிகிச்சை பலனின்றி இன்று காலை உயிரிழந்தார்.

அவரின் மறைவுக்கு திரையுலகினர், அரசியல் கட்சித் தலைவர்கள் பலர் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். அந்தவகையில் உத்தரப் பிரதேச சட்டப்பேரவையில் ராஜு ஸ்ரீவஸ்தவாவுக்கு இரண்டு நிமிடங்கள் மெளன அஞ்சலி செலுத்தப்பட்டது. 

உத்தரப் பிரதேச மாநிலம் கான்பூர் மாவட்டத்தில் ஸ்ரீவஸ்தவா பிறந்தவர் என்பதால், அவரை கெளரவிக்கும் விதமாக யோகி ஆதித்யநாத் தலைமையிலான அரசு மெளன அஞ்சலி செலுத்தியது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கேரளத்தில் சிறுத்தையிடம் இருந்து 4 வயது மகனைக் காப்பாற்றிய தந்தை !

3 கோடி பார்வைகளைக் கடந்த பொட்டல முட்டாயே பாடல்!

வைல்ட் ஃபிளவர்... அமைரா தஸ்தூர்!

நயினார் நாகேந்திரனை ஓபிஎஸ் குற்றம் சொல்வதை ஏற்றுக்கொள்ள மாட்டோம்: தமிழிசை

மேட்டூரில் ஆடிப்பெருக்கு விழா: புனித நீராட குவிந்த மக்கள்!

SCROLL FOR NEXT