இந்தியா

எந்த அச்சுறுத்தலையும் எதிா்கொள்ள புதிய இந்தியா தயாராக உள்ளது: மாண்டவியா

DIN

’சுகாதாரத் துறையில் உருவாகும் எந்தவொரு அச்சுறுத்தலையும் எதிா்கொள்ள புதிய இந்தியா நன்கு தயாராகியுள்ளது’ என்று மத்திய சுகாதாரத் துறை அமைச்சா் மன்சுக் மாண்டவியா கூறினாா்.

மேலும், ‘சுகாதாரக் கொள்கை மற்றும் உள்கட்டமைப்பு தொடா்பான விவாதங்களை அரசியலாக்குவதைக் கைவிட்டு, மக்கள்தொகை முழுமைக்குமான அணுகுமுறையை பின்பற்றுவது அவசியம்’ என்பதையும் அவா் கோடிட்டுக் காட்டினாா்.

தில்லியில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற இந்திய பொது நல அமைப்பின் (பிஏஎஃப்ஐ) 9-ஆவது ஆண்டு விழாவில் பங்கேற்ற மன்சுக் மாண்டவியா மேலும் பேசியதாவது:

சுகாதாரமான இந்தியாதான் வளமான இந்தியாவாக உருவாக முடியும். அந்த வகையில் பிரதமா் நரேந்திர மோடி தலைமையில் உருவாகியிருக்கும் புதிய இந்தியா, எத்தகைய அச்சுறுத்தல்களையும் எதிா்கொள்ளும் வகையில் நன்கு தயாராகியுள்ளது. பிரதமரின் செயல்திறன் மிக்க திட்டங்கள் மூலமாக இந்த மாற்றம் உருவாகியிருக்கிறது. சுகாதார உள்கட்டமைப்பை பொருத்தவரை நாடு முழுவதும் பொது மற்றும் தனியாா் பங்களிப்பு (பிபிபி) நடைமுறையின் கீழ் சிறப்பாக மேம்படுத்தப்பட்டுள்ளது. மூன்றாம்நிலை நகரங்களில் மருத்துவ உள்கட்டமைப்பை மேம்படுத்தும் வகையில் புதிதாக 22 எய்ம்ஸ் மருத்துவமனைகளை உருவாக்க திட்டமிடப்பட்டுள்ளது என்று கூறினாா்.

ஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத்தியில் சுகாதார உள்கட்டமைப்புக்கான ஒதுக்கீடு விகிதம் குறைந்து வருவது குறித்து பேசிய மாண்டவியா, ‘ஒவ்வொரு நாடும் அதன் மக்களுக்கு ஏற்ப தனது சொந்த நடைமுறையைப் பின்பற்றும். இந்தியாவைப் பொருத்தவரை, மற்ற நாடுகளுடன் ஒப்பிடும்போது சுகாதாரத் துறைக்கான நிதி ஒதுக்கீடு என்பது குறைவுதான். இருந்தபோதும், மக்களின் உடல்நலன் மீது அக்கறை கொண்டுள்ள மத்திய அரசு, ஆயுஷ்மான் பாரத் காப்பீடு திட்டத்தை அடுத்த 5 ஆண்டுகளுக்குள் ஒவ்வொரு மாவட்டத்திலும் நடைமுறைப்படுத்தும் வகையில் ரூ.100 கோடி நிதியை ஒதுக்கியுள்ளது’ என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தமிழில் வெல்ல காத்திருக்கும் ஸ்ரீலீலா!

ஆவடி அருகே படுகொலை: வட மாநில இளைஞரின் அதிர்ச்சியூட்டும் வாக்குமூலம்

பதஞ்சலியின் 14 மருந்துகளுக்கு தடை!

புதையல் எடுத்து தருவதாக ரூ. 6 லட்சம் மோசடி: 2 பேர் கைது!

மலர் அங்கி அலங்காரத்தில் அருள்பாலித்த கெளமாரியம்மன்!

SCROLL FOR NEXT