இந்தியா

பாகிஸ்தானில் மதக்கலவரம்: 8 ஆண்டுகளில் 4,000 ஷியாக்கள் படுகொலை!

பாகிஸ்தானில் மதக்கலவரம் தொடர்பாக கடந்த 8 ஆண்டுகளில் இதுவரை 4 ஆயிரம் ஷியாக்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். 

DIN

பாகிஸ்தானில் மதக்கலவரம் தொடர்பாக கடந்த 8 ஆண்டுகளில் இதுவரை 4 ஆயிரம் ஷியாக்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். 

நாட்டில் நிபந்தனைக்குள்பட்ட பொருளாதாரத்தின் வளர்ச்சியைத் தடுக்கும் பல தவறுகளை பாகிஸ்தான் எதிர்கொள்கிறது. உள்நாட்டில் சட்டம் மற்றும் ஒழுங்கு சீர்குளைவு உள்பட மதவெறி வன்முறைக்கு பெரும் சவால்களை ஏற்படுத்துகிறது. 

பாகிஸ்தானில், சன்னி குழுக்கள் ஷியாக்கள், அஹமதியர்கள் மற்றும் முஸ்லீம் அல்லாத சிறுபான்மையினரை அச்சுறுத்தி ராணுவம், அரசியல் தலைமையின் ஆதரவைப் பெற்று வருகின்றனர். 

அரசியல் உறுதியற்ற தன்மை மற்றும் பொருளாதார வீழ்ச்சியால் மதவாத வன்முறை தீவிரமடையும் என்று சர்வதேச நெருக்கடி குழு வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளது. 

மேலும், கராச்சி மற்றும் சிந்து, பஞ்சாபில் உள்ள பிற நகர்ப்புற மையங்களில் சன்னிகள் மற்றும் ஷியாக்களுக்கு இடையேயான மதவாத பதட்டத்தை மீண்டும் உருவாக்குவது பற்றிப் பாதுகாப்பு ஆய்வாளர் டாக்டர் ஆயிஷா சித்திக் எழுதினார். 2001 மற்றும் 2018-க்கு இடையில் மதவெறி வன்முறைச் சம்பவங்களில் சுமார் 4,847 ஷியாக்கள் கொல்லப்பட்டதைப் பாகிஸ்தான் நேரில் கண்டதாக அவர் சுட்டிக்காட்டினார். 

இதையடுத்து, கடந்த 8 ஆண்டுகளில் மொத்தம் 4000 ஷியாக்கள் மதக்கலவரத்தில் படுகொலை செய்யப்பட்டுள்ளனர் என்று அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ராதாபுரம் அருகே சாலையின் நடுவில் உள்ள மின்கம்பத்தை அகற்ற மக்கள் கோரிக்கை

2026 தோ்தலில் அதிமுக கூட்டணியே வெற்றி பெறும்: முன்னாள் அமைச்சா் கே.டி.ராஜேந்திர பாலாஜி

தூய்மைப் பணியாளா்களின் கோரிக்கைக்கு அரசு செவிசாய்க்க வேண்டும்: ஏ.ஐ.சி.சி.டி.யு ஆலோசகா் எஸ்.குமாரசாமி

பாஜகவினா் ரத்த தானம்

ஆட்சியா் அலுவலகத்தில் சமுகநீதி நாள் உறுதிமொழி ஏற்பு

SCROLL FOR NEXT