குவஹாட்டி ஐஐடி விடுதி அறையில் ஆந்திர மாணவர் தூக்கிட்டுத் தற்கொலை
குவஹாட்டி ஐஐடி விடுதி அறையில் ஆந்திர மாணவர் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
குவஹாட்டி ஐஐடி விடுதி அறையில் ஆந்திர மாணவர் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஆந்திரப் பிரதேசத்தின் கிழக்கு கோதாவரி மாவட்டத்தைச் சேர்ந்த குட்லா மகேஷ் சாய் ராஜ்(20) என்ற மாணவர் குவஹாட்டியில் உள்ள ஐஐடியில் பி.டெக் பயின்று வந்துள்ளார். இவர் கடந்த ஞாயிறு அன்று ஐஐடியில் உள்ள விடுதி அறையில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
தகவல் அறிந்து நிகவிடத்துக்கு வந்த காவல்துறையினர் உடலை மீட்டு உடற்கூறாய்வுக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் அந்த உடலை மாணவரின் குடும்பத்தினரிடம் ஒப்படைத்தனர். இதனிடையே குவஹாட்டி ஐஐடி வெளியிட்ட அறிக்கையில், விடுதி கட்டடத்தில் முன்னாள் மாணவரின் உடல் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது.
Advertisement
இதையும் படிக்க- இறையாண்மை விவகாரத்தில் சமரசம் செய்ய முடியாது: தைவான் அதிபர்
அதேசமயம் காவல்துறையின் விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு அளிப்போம் என்றும் குறிப்பிட்டுள்ளது. முன்னதாக செப்டம்பர் 16 ஆம் தேதி இதேபோல் கேரளத்தைச் சேர்ந்த மாணவர் ஒருவர் குவஹாட்டி ஐஐடி விடுதியில் தற்கொலை செய்து கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.