துருக்கியில் நிலக்கரி சுரங்க விபத்து: பலி எண்ணிக்கை 40 ஆக உயர்வு!
துருக்கியின், வடக்கு பார்டின் மாகாணத்தில் நிலக்கரி சுரங்கத்தில் ஏற்பட்ட வெடி விபத்தில் பலியானோர் எண்ணிக்கை 40 ஆக உயர்ந்துள்ளது.
துருக்கியின், வடக்கு பார்டின் மாகாணத்தில் நிலக்கரி சுரங்கத்தில் ஏற்பட்ட வெடி விபத்தில் பலியானோர் எண்ணிக்கை 40 ஆக உயர்ந்துள்ளது.
பார்டின் மாகாணத்தின் அமஸ்ரா நகரில் அமைந்துள்ள நிலக்கரி சுரங்கத்தில் 150-க்கும் மேற்பட்டோர் சுரங்கத்தில் வேலைசெய்து வந்தனர். நேற்று மாலை 6.15 மணியளவில் நிலக்கரி சுரங்கத்தின் ஒரு பகுதியில் திடீரென வெடி விபத்து ஏற்பட்டது.
சுரங்க விபத்து ஏற்பட்ட சமயத்தில் 110 பேர் பணியில் இருந்ததாகவும், அதில் இதுவரை 40 பேர் பலியாகியுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும் பலர் இடிபாடுகளில் சிக்கியுள்ளனர். தொடர்ந்து மீட்புப் பணிகள் நடைபெற்று வருகின்றது.
Advertisement
Advertisement
சுரங்க விபத்தில் காயமடைந்தவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மேலும் மீட்புப் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில், பலி எண்ணிக்கை மேலும் உயரக்கூடும் என அஞ்சப்படுகிறது.
2014ஆம் ஆண்டில் துருக்கியின் மேற்கு நகரமான சோமாவில் நிகழ்ந்த குண்டுவெடிப்பில் 301 பேர் உயிரிழந்தனர்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.