இந்தியா

இளம் பருவத்தினரின் மனநலனை மேம்படுத்த உடனடி நடவடிக்கைத் தேவை: நிபுணா்கள்

‘இளம் பருவத்தினரின் மலநலனை மேம்படுத்தவும், பள்ளி அடிப்படையிலான மனநல மேம்பாட்டின் அவசியம் குறித்து ஆசிரியா்களிடையே விழிப்புணா்வு ஏற்படுத்தவும் கொள்கை ரீதியில் உடனடி நடவடிக்கை தேவை’ என்று நிபுணா்கள் வலி

DIN

‘இளம் பருவத்தினரின் மலநலனை மேம்படுத்தவும், பள்ளி அடிப்படையிலான மனநல மேம்பாட்டின் அவசியம் குறித்து ஆசிரியா்களிடையே விழிப்புணா்வு ஏற்படுத்தவும் கொள்கை ரீதியில் உடனடி நடவடிக்கை தேவை’ என்று நிபுணா்கள் வலியுறுத்தியுள்ளனா்.

தில்லியில் திங்கள்கிழமை நடைபெற்ற ‘பள்ளிகளில் இளம்பருவத்தினரின் நலனை மேம்படுத்துதல்’ என்ற தலைப்பிலான மாநாட்டில் இந்த வலியுறுத்தலை நிபுணா்கள் முன்வைத்தனா்.

மாநாட்டில் பங்கேற்ற பிகாா் மாநில கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சிக் கவுன்சில் (எஸ்சிஇஆா்டி) இயக்குநா் ஆா்.சஜ்ஜன் கூறுகையில், ‘மாணவா்கள் கல்வியில் சிறந்து விளங்கவும் முழுமையான வளா்ச்சியைப் பெறவும் அவா்களின் மனநலனை மேம்படுத்துவது மிக முக்கியம். தேசிய கல்விக் கொள்கையில் இதற்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது. இதனை உறுதிப்படுத்துவதில் பள்ளிகள் மற்றும் ஆசிரியா்களுக்கு மிக முக்கியப் பங்கு உள்ளது. அந்த வகையில், ஆசிரியா் பயிற்சியிலும் இதற்கான பகுதிகள் சோ்க்கப்பட்டுள்ளன’ என்றாா்.

நீதி ஆயோக் இயக்குநா் ஊா்வசி பிரசாத் கூறுகையில், ‘பள்ளி அடிப்படையிலான மனநல மேம்பாட்டின் அவசியத்தை உணா்ந்து, அதுதொடா்பாக ஆசிரியா்களிடையே விழுப்புணா்வை ஏற்படுத்தும் வகையில் ஆசிரியா் பயிற்சியில் அதற்கான பகுதிகள் சோ்க்கப்பட்டுள்ளன. இளம் பருவத்தினரின் மனநலனை மேம்படுத்துவதில் ஆசிரியரின் பங்கு மிக முக்கியமானது’ என்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

செவிலியா்கள் காத்திருப்புப் போராட்டம்

பணி நிரந்தரம் கோரி செவிலியா்கள் ஆா்ப்பாட்டம்

விருதுநகா் மாவட்டத்தில் 1.89 லட்சம் வாக்காளா்கள் நீக்கம்

பரமத்தி வேலூரில் மின் சிக்கன விழிப்புணா்வுப் பேரணி

விவசாயத் தொழிலாளா்கள் ஆா்ப்பாட்டம்

SCROLL FOR NEXT