ஹிந்துத்துவா தலைவர் சாம்பாஜி பிடே 
இந்தியா

சாய்பாபாவை வணங்குவதை நிறுத்த வேண்டும்: ஹிந்துத்துவா தலைவர்

சாய்பாபாவை வணங்குவதை ஹிந்துக்கள் நிறுத்த வேண்டும் என்று ஹிந்துத்துவா தலைவர் சாம்பாஜி பிடே கூறியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

DIN

மும்பை: சாய்பாபாவை வணங்குவதை ஹிந்துக்கள் நிறுத்த வேண்டும் என்று ஹிந்துத்துவா தலைவர் சாம்பாஜி பிடே கூறியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

ஏற்கெனவே, மகாத்மா காந்தியின் தந்தை முஸ்லீம் என்றும் அதற்கு தன்னிடம் ஆதாரம் இருப்பதாகவும் சாம்பாஜி பிடே வெளியிட்ட கருத்து பெரும் சலசலப்பை ஏற்படுத்தியது.

இந்நிலையில், கடந்த திங்கள்கிழமை சாய்பாபா குறித்து மீண்டும் ஒரு சர்ச்சை கருத்தை வெளியிட்டுள்ளார்.

“சாய்பாபாவை ஹிந்துக்கள் மதிக்கிறார்கள். ஆனால், அவர் உண்மையில் அதற்கு தகுதியானவரா என்பதை சரிபார்க்க வேண்டும். ஹிந்துக்கள் தங்களின் வீடுகளில் உள்ள சாய்பாபா புகைப்படம் மற்றும் சிலைகளை அகற்றி எறிய வேண்டும்.

சாய்பாபா கோயிலுக்கு செல்வதை நிறுத்த வேண்டும். சாய்பாபாவை கடவுளாகவே கருதக்கூடாது” என்று பிடே பேசியுள்ளார்.

இவரின் கருத்துக்கு காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ், பாஜக உள்ளிட்ட கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

லாக்-அப் மரணம் அல்ல!காவல் நிலையத்தில் ஒருவர் மர்ம மரணம்!நடந்தது என்ன?காவல் ஆணையர் பேட்டி!

உத்தரகண்ட் நிலச்சரிவில் 150 பேர் உயிருடன் மீட்பு, 11 ராணுவ வீரர்கள் மாயம்!

6.41 லட்சம் பேருக்கு வேலை: முதல்வர் ஸ்டாலின் பெருமிதம்!

காஸாவின் கோரம்! பசி மரணங்கள் 200-யை எட்டியது! இதில் 90 பேர் குழந்தைகள்!!

உத்தரகாசி பேரிடர்! வெள்ளத்திலிருந்து உயிருடன் மீண்டு வந்து அதிசய மனிதர்!

SCROLL FOR NEXT