எதிர்க்கட்சிகளின் கூட்டணிக்கு இந்தியா என பெயர் சூட்டப்பட்டதை எதிர்த்து தில்லி உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.
கிரிஷ் உபாத்யாயா என்பவர் தாக்கல் செய்த மனு குறித்து மத்திய அரசு, தேர்தல் ஆணையம், எதிர்க்கட்சிகள் பதில்தர நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.
காங்கிரஸ், தி.மு.க., திரிணாமுல் காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளின் கூட்டணிக்கு ‘இந்தியா’ எனப்பெயர் வைக்கப்பட்டுள்ளது.
பாட்னா, பெங்களூரு ஆகிய இடங்களில் மக்களவைத் தேர்தல் வியூகம் குறித்து எதிர்க்கட்சித் தலைவர்கள் கூடி ஆலோசனை நடத்தினர். அந்த ஆலோசனையின் முடிவில் எதிர்க்கட்சிகளின் கூட்டணிக்கு இந்தியா என பெயரிட்டனர்.
சொந்த நாட்டுக்கு எதிராக பாஜக மற்றும் பிரதமா் நரேந்திர மோடியைக் காண்பிக்கும் விதத்தில் உள்நோக்கத்துடன் ‘இந்தியா’ என பெயா் சுருக்கம் வருமாறு எதிா்க்கட்சிகள் கூட்டணிக்குப் பெயா் சூட்டியுள்ளதாக ஆளும் கட்சியினர் குற்றம் சாட்டியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.