இந்தியா

மேற்கு வங்க புதிய கல்விக் கொள்கையில்வங்க மொழி, சம்ஸ்கிருதம், ஹிந்திக்கு முன்னுரிமை

மேற்கு வங்கத்தில் 5 முதல் 8-ஆம் வகுப்பை வரை படிக்கும் மாணவா்கள் 3 மொழிகளைக் கற்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. அதில் பிராந்திய மொழியான வங்க மொழி, சம்ஸ்கிருதம், ஹிந்திக்கு முன்னுரிமை அளிக்கப்பட்டுள்ளது.

DIN

மேற்கு வங்கத்தில் 5 முதல் 8-ஆம் வகுப்பை வரை படிக்கும் மாணவா்கள் 3 மொழிகளைக் கற்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. அதில் பிராந்திய மொழியான வங்க மொழி, சம்ஸ்கிருதம், ஹிந்திக்கு முன்னுரிமை அளிக்கப்பட்டுள்ளது.

மேற்கு வங்க மாநிலத்தில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள புதிய கல்விக் கொள்கையில் இத்திட்டம் இடம் பெற்றுள்ளது. இது தொடா்பாக கல்வித் துறை அதிகாரிகள் மேலும் கூறுகையில், ‘தொடக்கக் கல்வியில் தாய்மொழியும், கூடுதலாக ஒரு மொழியும் கற்பிக்கப்படும். 5 முதல் 8-ஆம் வகுப்பு வரை மொழிகள் கற்பிக்கப்படும், மூன்றாவது மொழி மற்றொரு பிராந்திய மொழியாகவோ, வெளிநாட்டு மொழியாகவோ இருக்கும். எனினும், வங்க மொழி, சம்ஸ்கிருதம், ஹிந்தி ஆகிய மொழிகளுக்கு முன்னுரிமை அளிக்கப்படும்.

வரும் தலைமுறையினருக்கு வங்க மொழியை அதிகம் கற்பிக்க வேண்டும் என்பதே இதன் நோக்கம். படிப்படியாக இந்த மும்மொழிக் கொள்கை அறிமுகப்படுத்தப்படும்’ என்று தெரிவித்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பங்குச் சந்தை எழுச்சி: சென்செக்ஸ் 447 புள்ளிகள் உயர்வுடன் நிறைவு!

அதிபர் டிரம்ப்பின் கிறிஸ்துமஸ் விருந்தில் பிரபல பாலிவுட் நடிகை!

மார்கழி வழிபாடு: திருப்பாவை, திருவெம்பாவை - பாசுரம் 5

உலகத் தரத்தில் VFX காட்சிகள்! ஆனால் கதை? - AVATAR 3 திரைவிமர்சனம்

தி​ரு​மண பாக்​கி​யம் அரு​ளி​டும் திரு​மால்

SCROLL FOR NEXT