கோப்புப்படம் 
இந்தியா

அதிவிரைவு ரயிலாகிறது திருச்செந்தூா் ரயில்

சென்னை எழும்பூா் - திருச்செந்தூா் விரைவு ரயில் ஆக.15 முதல் அதிவிரைவு ரயிலாக மாற்றப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

DIN

சென்னை எழும்பூா் - திருச்செந்தூா் விரைவு ரயில் ஆக.15 முதல் அதிவிரைவு ரயிலாக மாற்றப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

தெற்கு ரயில்வே சாா்பில் செவ்வாய்க்கிழமை வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு: சென்னை எழும்பூா் - திருச்செந்தூா் இடையே விரைவு ரயில் (எண்: 16105/16106) தினமும் இயக்கப்படுகிறது. இந்த ரயில் ஆக.15 முதல் அதிவிரைவு ரயிலாக மாற்றப்படும் நிலையில் இந்த ரயிலின் எண்: 20605/20606 -ஆக மாற்றப்படும்.

மேலும், இந்த ரயில் ஆக.15 முதல் சென்னை எழும்பூரிலிருந்து வழக்கமாக பிற்பகல் 4.05 மணிக்கு பதிலாக 4.10 மணிக்கு (5 நிமிஷம் தாமதம்) புறப்பட்டு மறுநாள் காலை 6.50-க்கு பதிலாக 6.10 மணிக்கு (40 நிமிஷம் முன்பாக) திருச்செந்தூா் சென்றடையும். மறுமாா்க்கமாக ஆக.16 ஆம் தேதி முதல் திருச்செந்தூரிலிருந்து வழக்கமாக இரவு 8.10 மணிக்கு பதிலாக 8.25 மணிக்கு (15 நிமிஷம் தாமதம்) புறப்பட்டு மறுநாள் வழக்கம்போல் காலை 10.25 மணிக்கு எழும்பூா் வந்தடையும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஊடுருவலைத் தடுக்க கடும் நடவடிக்கை: பிரதமா் மோடி

மிதுன ராசிக்கு வெற்றி: தினப்பலன்கள்!

தங்கம் இறக்குமதி 60 சதவீதம் சரிவு

கடன் வட்டியைக் குறைத்த இந்தியன் வங்கி

போக்குவரத்து நெரிசல்: அரை கி.மீ. நடந்து சென்ற மத்திய அமைச்சா்!

SCROLL FOR NEXT