கூகுள் டூடுல் 
இந்தியா

சுதந்திர நாள்: சிறப்பு கவன ஈர்ப்புச் சித்திரம் வெளியிட்டது கூகுள்

இந்தியாவின் சுதந்திர நாளைக் கொண்டாடும் வகையில், சிறப்பு கவன ஈர்ப்புச் சித்திரம் வெளியிட்டிருக்கிறது கூகுள்.

DIN


இந்தியாவின் சுதந்திர நாளைக் கொண்டாடும் வகையில், சிறப்பு கவன ஈர்ப்புச் சித்திரம் வெளியிட்டிருக்கிறது கூகுள்.

இந்திய சுதந்திர நாளை முன்னிட்டு புது தில்லியைச் சேர்ந்த  கலைஞர் நம்ரதா குமார் அவர்களால் வரையப்பட்ட ஓவியம் சிறப்பு கவன ஈர்ப்புச் சித்திரிமாக (கூகுள் டூடுல்) வைக்கப்பட்டுள்ளது.

1947 ஆம் ஆண்டு இதே நாளில் இந்தியா, ஆங்கிலேயர் ஆட்சியில் இருந்து சுதந்திரமடைந்து, ஒரு புதிய சகாப்தம் உதயமானது.

நாட்டின் சுதந்திர நாளின் அடையாளமாக, தில்லி செங்கோட்டையில் ஆண்டுதோறும் கொடியேற்றும் விழா, நடைபெறும். இன்று நடைபெற்ற விழாவில் பிரதமர் நரேந்திர மோடி தேசியக் கொடியேற்றி நாட்டு மக்களிடையே உரையாற்றினார்.

நாடு முழுவதும் குடிமக்கள் தேசிய கீதத்தை பாடி சுதந்திர இயக்கத்தின் தலைவர்களை நினைவு கூர்கின்றனர். பள்ளி, கல்லூரிகளில் சுதந்திர நாள் விழா சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது.

இதனை சிறப்பிக்கும் வகையில், கூகுளின் சிறப்பு கவன ஈர்ப்புச் சித்திரத்தில், வரலாற்றுச் சிறப்புமிக்க சிற்பங்கள், பரதநாட்டியம் போன்ற நிகரில்லா கலை வடிவங்கள் என கலைகளின் பிறப்பிடமாக உள்ள மாநிலத்திலிருந்து கண்ணைக் கவரும் காஞ்சீவரம் சேலைகள் உள்ளிட்ட ஆடைகளின் கலாசாரத்தை வெளிப்படுத்தும் ஓவியம் பகிரப்பட்டுள்ளது.

இந்த கூகுள் டூடுல் (Google Doodle) மூலம், காஞ்சீவரம் ஆடை மற்றும் இந்தியாவில் திறமையாக வடிவமைக்கப்படும் இன்னும் பல ஆடைகளின் பழம்பெரும் கலாச்சாரத்தைக் கொண்டாடுவதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பிரியமான லெஹெங்கா... ஆம்னா ஷரீஃப்!

பிகார் தேர்தல்: காட்டாட்சிக்கு எதிராக பெண்கள் - பிரதமர் மோடி

வெண் மேகமே... கரிஷ்மா டன்னா!

பிக்-பாஸ் தொடரில் இருந்து ரவிச்சந்திரன் அஸ்வின் விலகல்!

பிகாரில் ஆட்சிக்கு வந்தால் பொங்கல்தோறும் மகளிருக்கு ரூ.30,000: தேஜஸ்வி

SCROLL FOR NEXT