இந்தியா

செங்கோட்டை விழாவில் பங்கேற்காதது ஏன்? காங்கிரஸ் தலைவர் விளக்கம்

தில்லி செங்கோட்டையில் நடைபெற்ற சுதந்திர நாள் விழாவில் பங்கேற்காதது குறித்து காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே விளக்கம் அளித்துள்ளார்.

DIN

தில்லி: தில்லி செங்கோட்டையில் நடைபெற்ற சுதந்திர நாள் விழாவில் பங்கேற்காதது குறித்து காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே விளக்கம் அளித்துள்ளார்.

நாட்டின் சுதந்திர நாள் செவ்வாய்க்கிழமை (ஆக. 15) கொண்டாடப்பட்டு வரும் நிலையில், தில்லி செங்கோட்டையில் தொடா்ந்து 10-ஆவது முறையாகப் பிரதமா் நரேந்திர மோடி தேசியக் கொடி ஏற்றினார்.

இந்த நிகழ்வில், மத்திய அமைச்சர்கள், அரசியல் கட்சித் தலைவர்கள் பங்கேற்ற நிலையில், காங்கிரஸ் தலைவரும் மாநிலங்களவை எதிர்க்கட்சித் தலைவருமான மல்லிகார்ஜுன கார்கே கலந்து கொள்ளவில்லை.

இதுகுறித்து மல்லிகார்ஜுன கார்கே கூறியதாவது:

“எனக்கு சில கண் பிரச்னை உள்ளது. அதுமட்டுமின்றி, காலை 9.20 மணிக்கு எனது இல்லத்திலும், பிறகு காங்கிரஸ் தலைமை அலுவலகத்திலும் தேசியக் கொடியேற்றும் நிகழ்வு இருந்தது. அதனால், செங்கோட்டைக்கு என்னால் வர இயலவில்லை.

அங்கு பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. பிரதமர் புறப்படுவதற்கு முன்னதாக மற்றவர்கள் அங்கிருந்து புறப்பட முடியாது. இதனால், சரியான நேரத்தில் காங்கிரஸ் நிகழ்வுக்கு வர முடியாது என்பதால் செங்கோட்டை செல்வதை தவிர்தேன்.” என்று தெரிவித்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

அகில இந்திய விவசாயத் தொழிலாளா்கள் ஆா்ப்பாட்டம்

கூடக்கோவில் காவல் நிலையத்தை முற்றுகையிட்ட கிராம மக்கள்

தீக்குளித்து இறந்தவரின் உடலை வாங்க மறுத்து போராட்டம்

2.07 லட்சம் மாடுகளுக்கு கோமாரி நோய்: தடுப்பூசி செலுத்த இலக்கு

இன்றைய மின்தடை

SCROLL FOR NEXT