கோப்புப் படம். 
இந்தியா

உ.பி.: விடுதியில் இருந்து துப்பாக்கிகள், வெடிகுண்டுகள் பறிமுதல்

உ.பி.யில் விடுதி ஒன்றில் இருந்து இரண்டு கைத்துப்பாக்கிள் மற்றும் 30 வெடிகுண்டுகளை காவல்துறையினர் பறிமுதல் செய்துள்ளனர்.  

DIN

உ.பி.யில் விடுதி ஒன்றில் இருந்து இரண்டு கைத்துப்பாக்கிள் மற்றும் 30 வெடிகுண்டுகளை காவல்துறையினர் பறிமுதல் செய்துள்ளனர். 

உத்தர பிரதேச மாநிலம், பிரயாக்ராஜ் மாவட்டத்தில் உள்ள விடுதியில் இரண்டு சிறுவர்களுக்கு இடையே கைகலப்பு ஏற்பட்டுள்ளது. அங்கு வந்த காவல்துறையினர் விடுதியின் அறை எண் 57ல் சோதனையை மேற்கொண்டனர்.

காவல்துறையினரை கண்டதும் அந்த சிறுவர்கள் அங்கிருந்து தப்பியோடினர். 

சோதனையில் அறையிலிருந்து இரண்டு கைத்துப்பாக்கிகள் மற்றும் 30 வெடிகுண்டுகளை காவல்துறையினர் கண்டறிந்தனர்.  அவற்றை பறிமுதல் செய்த காவல்துறையினர் இதுதொடர்பாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

விடுதியில் ஒன்றில் இருந்து கைத்துப்பாக்கிள் மற்றும் 30 வெடிகுண்டுகளை காவல்துறையினர் பறிமுதல் செய்திருப்பது உ.பி.யில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

புகையில்லா போகி: ஆட்சியா் கோரிக்கை

ஊராட்சிச் செயலா்களின் தொடா் வேலைநிறுத்தத்தால் பணிகள் பாதிப்பு

சமத்துவ பொங்கல் விழா

அம்மன் தாலி செயின் திருடிய இருவா் கைது

விஜய்யிடம் பொங்கலுக்குப் பின் மீண்டும் விசாரணை!

SCROLL FOR NEXT