இந்தியா

60 ஆண்டுகளில் செய்யாததை 8 ஆண்டுகளில் சாதித்தார் பிரதமர் மோடி: அனுராக் தாக்கூர்!

60 ஆண்டுகளில் செய்ய முடியாததை 8 ஆண்டுகளில் பிரதமர் மோடி செய்து முடித்துள்ளதாக மத்திய அமைச்சர் அனுராக் தாக்கூர் சனிக்கிழமை கூறினார். 

DIN

60 ஆண்டுகளில் செய்ய முடியாததை 8 ஆண்டுகளில் பிரதமர் மோடி செய்து முடித்துள்ளதாக மத்திய அமைச்சர் அனுராக் தாக்கூர் சனிக்கிழமை கூறினார். 

பிரதமர் மோடியின் உரைகளின் தொகுப்பை அடிப்படையாகக் கொண்ட சப்கா சாத், சப்கா விகாஸ், சப்கா விஸ்வாஸ் (அனைவரின் ஆதரவு, அனைவரின் வளர்ச்சி, அனைவரின் நம்பிக்கை) புத்தக வெளியீட்டு விழாவில் தாக்கூர் உரையாற்றினார். 

அப்போது அவர் கூறுகையில், 

சந்திரனின் தென் துருவத்தில் விண்கலத்தை தரையிறக்கிய உலகின் முதல் நாடு என்ற பெருமையை இந்தியா பெற்றுள்ளது. இது பெருமையான தருணமாக நான் கருதுகிறேன். 60 ஆண்டுகளில் செய்ய முடியாததை வெறும் 8 ஆண்டுகளில் மோடி செய்து முடித்துள்ளார். 

நாட்டில் 4 கோடி பேருக்கு வீடுகள் கிடைத்துள்ளதாகவும், 12 கோடி பெண்கள் மற்றும் குடும்பங்களுக்கு கழிப்பறைகள் வழங்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார். 

அனைத்து கிராமங்களுக்கும் மின்சாரம் கிடைத்துள்ளது. கரோனா காலத்தில் 80 கோடி ஏழைகள் இரண்டரை ஆண்டுகளாக அரிசி, பருப்பு என பல்வேறு பயன்களை பெற்றதாகவும், மூன்று ஆண்டுகளில் 12 கோடி மக்களுக்கு குழாய் நீர் வழங்கப்பட்டது. 

மேலும், ஆயுஷ்மான் பாரத் யோஜனா திட்டத்தின் கீழ் 60 கோடி மக்களுக்கு ரூ.5 லட்சத்துக்கு இலவச சிகிச்சை வழங்கியதாகவும், இது அனைத்தும் கடந்த 8 ஆண்டுகளில் மோடி செய்துள்ளார் எனவும் அவர் தெரிவித்தார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

உத்தரகண்டில் தொடரும் கனமழை: நிலச்சரிவில் மாயமானவர்களை தேடும் ராணுவம்!

பேரிடர் அபாயங்களை எதிர்கொள்ளத் தயாராக இருக்க வேண்டும்: சு.வெங்கடேசன் எம்.பி

சென்னை நட்சத்திர விடுதியில் தீ விபத்து: கிராண்ட் மாஸ்டா்ஸ் செஸ் ஒத்திவைப்பு!

ஒகேனக்கல்லுக்கு நீா்வரத்து 9,500 கனஅடியாக அதிகரிப்பு

அதைப் பற்றி எதுவும் தெரியாது! இந்தியாவின் குற்றச்சாட்டுக்கு டிரம்ப் பதில்!

SCROLL FOR NEXT