இந்தியா

கரும்புக்கான ஆதார விலையை உயர்த்தினார் பஞ்சாப் முதல்வர்!

கரும்புக்கான குறைந்தபட்ச ஆதார விலையை உயர்த்தக்கோரி நூற்றுக்கணக்கான விவசாயிகள் போராட்டம் நடத்தியதையடுத்து பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான் ரூ.11 உயர்த்தியுள்ளார். 

DIN

கரும்புக்கான குறைந்தபட்ச ஆதார விலையை உயர்த்தக்கோரி நூற்றுக்கணக்கான விவசாயிகள் போராட்டம் நடத்தியதையடுத்து பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான் ரூ.11 உயர்த்தியுள்ளார். 

அரசு ஒப்புக்கொண்ட கரும்பு விலையை ரூ.11 உயர்த்தும் முடிவுக்கு முதல்வர் மான் ஒப்புதல் அளித்துள்ளார். கரும்பு விலை தற்போது குவிண்டால் ஒன்றுக்கு ரூ.380ல் இருந்து ரூ.391 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. 

இதுதொடர்பாக அவர் பகிர்ந்த எக்ஸ் பதிவில்,

பஞ்சாப் விவசாயிகளுக்கு இன்று நல்ல நாள். கரும்பு விலை ரூ.11 உயர்த்தப்பட்டுள்ளது என்று அவர் பதிவிட்டுள்ளார். 

கரும்புக்கான குறைந்தபட்ச ஆதார விலை அதிகரிப்பு மற்றும் மாநிலத்தில் கரும்பு ஆலைகளைத் திறப்பது தொடர்பாக விவசாயிகளுடனான சந்திப்புக்குப் பிறகு முதல்வர் மான் இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளார். 

கரும்பு விலையை குவிண்டால் ஒன்றுக்கு ரூ.70 உயர்த்தக்கோரி ஜலந்தரின் கடந்த 4 நாள்களாக விவசாயிகள் போராட்டம் நடத்தி வந்தனர். முதல்வர் மான் உறுதியளித்ததையடுத்து விவசாயிகள் போராட்டத்தைக் கைவிட்டனர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தேவா யாருன்னு தெரிஞ்சும் விளையாடறானுங்க... கூலி டிரைலர்!

நகையை பறித்து தப்பிச்சென்றபோது கார் மீது இருசக்கர வாகனம் மோதல்: சிறுவன் பலி, 8 பேர் காயம்

21 ரன்களில் மிகப் பெரிய சாதனையை தவறவிட்ட ஷுப்மன் கில்!

உள்ளிருந்தும் ஒளிர்கிறேன்... கமல் பதிவு!

சிந்தும் ஓவியம்... யாஷிகா ஆனந்த்!

SCROLL FOR NEXT