அனுராக் தாக்குர் | INS 
இந்தியா

ராஜஸ்தானில் பாஜக வெற்றி பெறும்: அனுராக் தாக்குர்

ராஜஸ்தான் மாநிலத்தில் பாஜக ஆட்சியமைக்கும் என மத்திய அமைச்சர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

DIN

ஜெய்ப்பூர்: மத்திய அமைச்சர் அனுராக் தாக்குர், ராஜஸ்தானில் பாஜக அறுதி பெரும்பான்மையில் வெற்றி பெறும் என நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

டிச.3 ஞாயிற்றுக்கிழமை அன்று காலை 8 மணிக்கு ராஜஸ்தான் மாநிலத்தின் வாக்கு எண்ணிக்கை நடைபெறவுள்ளது.

மேலும் அவர், “ஊழல் ஆட்சியில் இருந்து எப்போது விடுதலை கிடைக்கும் என்கிற மக்களின் காத்திருப்பு நாளையோடு முடிந்தது. காங்கிரஸின் உண்மையான முகம் நாளை வெளிப்படும். மக்களுக்கான நல்லாட்சி, பாஜக ஆட்சியாக அமையும். மக்களுக்கு வேண்டிய வளர்ச்சியும் இரண்டு மடங்கு ஆற்றல் கொண்ட ஆட்சியை ராஜஸ்தானில் பாஜக கொண்டுவரும்” எனத் தெரிவித்துள்ளார்.

ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள 200 தொகுதிகளில் 199 தொகுதிகளில் வாக்குப் பதிவு நடைபெற்றது. ஒரு தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் இறந்ததால் அந்தத் தொகுதியில் மட்டும் வாக்குப் பதிவு நடைபெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

புதிய பொறுப்பு காத்திருக்கிறது இவர்களுக்கு: தினப்பலன்கள்!

பாலியல் தொல்லையால் பாா்வையற்றோா் பள்ளி மாணவி மரணமா?

அமெரிக்க வரி எதிரொலி: ஏற்றுமதி ரக இறால் உள்ளூரில் விற்பனை தொடக்கம்

வாய்க்காலில் விழுந்து மதுபானக் கடை மேற்பாா்வையாளா் உயிரிழப்பு

காதல் விவகாரத்தில் இளைஞா் கொலை: 5 போ் கைது!

SCROLL FOR NEXT