நிர்மலா சீதாராமன் | கோப்பு 
இந்தியா

பிப்.1 இடைக்கால நிதிநிலை அறிக்கையில்... : நிர்மலா சீதாராமன்

இடைக்கால நிதிநிலை அறிக்கை குறித்து நிதியமைச்சர் பேசியுள்ளார்

DIN

புதுதில்லி: மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், பிப்.1, 2024-ல் சமர்ப்பிக்கப்படும் இடைக்கால நிதிநிலை அறிக்கையில் எந்தவித அறிவிப்பும் இருக்காது, மே மாதத்தில் நடைபெறவிருக்கும் பொதுத் தேர்தலை முன்னிட்டு நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்படும் எனத் தெரிவித்துள்ளார்.

அவர், “தேர்தல் நடைபெறவிருப்பதால் பிப்.1, 2024 நிதிநிலை அறிக்கை (வோட் ஆன் அக்கவுண்ட்) புதிய வரிவிதிப்பின்றி அறிவிக்கப்படும். அதில் அடுத்த ஆட்சி அமையவிருக்கும்வரை அரசு எதிர்கொள்ளவிருக்கும் செலவினங்கள் மட்டுமே பட்டியலிடப்படும்” எனத் தெரிவித்துள்ளார்.

2024-ல் நடைபெறவிருக்கும் தேர்தலை நாடு எதிர்நோக்கியிருப்பதாகத் தெரிவித்துள்ள நிர்மலா சீதாராமன், 2024-25 நிதிநிலை அறிக்கையில் வேறு எந்தவித புதிய அறிவிப்பும் வெளியாகாது எனக் கூறினார்.

ஒவ்வொரு ஆண்டும் இடைக்கால நிதிநிலை அறிக்கையை நாட்டின் நிதியமைச்சர் பிப்.1 நாடாளுமன்றத்தில் சமர்பிப்பதும் விவாதங்கள் மற்றும் அவையின் ஏற்புக்குப் பிறகு ஏப்.1 முதல் அமலுக்கு வருவதும் வழக்கம்.

இந்த அறிக்கையில், தேர்தல் வருகிற ஆண்டு என்பதால் புதிய வரி விதிப்புகள், செலவுத்திட்டங்கள் இடம்பெறாது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

வாசலிலே பூசணிப் பூ.. மார்கழி கோலத்தில் வைக்கும் பூ, தை மாத திருமணத்துக்கான அச்சாணியா?

பொங்கலுக்குப் பிறகு எங்களைப் பார்த்து நாடே வியக்கும்: செங்கோட்டையன் பேட்டி

கி.மு.1155ஆம் ஆண்டைய நெல்மணிகள்! சிவகளை அகழாய்வு பற்றி ஏ.வ. வேலுவுக்கு விளக்கிய தங்கம் தென்னரசு!!

சென்னை பிஎஸ்என்எல் அலுவலகத்தில் தீ விபத்து!

தொடர் நாயகன் வருண் சக்கரவர்த்தி பகிர்ந்த படையப்பா பாடல்!

SCROLL FOR NEXT