இந்தியா

பேருந்து மீது துப்பாக்கிச்சூடு: 6 குண்டுகள் பாய்ந்த பெண் கவலைக்கிடம்!

DIN

காஷ்மீர் சிலாஸ் நகரத்தில் பேருந்தின் மீது தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் குடும்பத்தைப் பாதுகாப்பதற்காக ஆறு குண்டுகளை தனது உடம்பில் வாங்கிய பெண், உயிருக்கு ஆபத்தான நிலையில் கராச்சி தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வருகிறார்.  

தாக்குதலுக்கு உள்ளான பெண் இஸ்லாமாபாத்தில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், கடந்த வெள்ளிக்கிழமை இரவு மேல் சிகிச்சைக்காக கராச்சியில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டுவரப் பட்டார்.

அருகிலிருந்த மலைகளிலிருந்து அடையாளம் தெரியாத நபர்கள் நடத்திய இந்தத் துப்பாக்கிச் சூட்டில் கட்டுப்பாடை இழந்த பேருந்து விபத்துக்குள்ளாகியுள்ளது. துப்பாக்கிச் சூட்டின் போது அந்தப் பெண்ணிற்கு முதுகு தண்டுவட பகுதியில் நான்கு குண்டுகளும், வயிறு மற்றும் கல்லீரலில் பகுதியில் இரண்டு குண்டுகளும் பாய்ந்துள்ளது. இந்த தாக்குதலில் இரண்டு ராணுவ வீரர்கள் உட்பட 10 பேர் உயிரிழந்துள்ளனர், 21 பயணிகள் காயமடைந்துள்ளனர். 

இதையும் படிக்க: தெலங்கானா எம்எல்ஏக்கள் பதவியேற்பு!

இந்த தாக்குதலுக்கு உள்துறை அமைச்சர் ஷாம்ஸ் லோன் கண்டனம் தெரிவித்துள்ளார்.

ஜம்மு-காஷ்மீரின் இந்தப் பகுதியில் சமீபகாலமாக தீவிரவாதிகள் தாக்குதல் அதிகரித்துவருவது குறிப்பிடத்தக்கது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

‘நான் முதல்வன்’ திட்டத்தின் கீழ் பெரியாா் பல்கலை. மாணவா்கள் இங்கிலாந்து பயணம்

அரசுப் பள்ளியிலும், தாய்மொழியிலும் படித்துதான் சாதித்தோம் -ஆட்சியா், காவல் ஆணையா், மாநகராட்சி ஆணையா் பேச்சு

9.4 ஓவா்களில் 167 ரன்கள் விளாசி ஹைதராபாத் அபார வெற்றி!

இன்றைய நாள் உங்களுக்கு எப்படி?

தினம் தினம் திருநாளே!

SCROLL FOR NEXT