இந்தியா

நேரு மீது ஏன் இவ்வளவு வன்மம்?: ஃபரூக் அப்துல்லா

DIN

தேசிய மாநாட்டுக் கட்சித் தலைவர் ஃபரூக் அப்துல்லா, இந்தியாவின் முதல் பிரதமர் ஜவகர்லால் நேரு சட்டப்பிரிவு 370 கொண்டுவர காரணமில்லை என்றும் சட்டப்பிரிவு நீக்கம் செல்லும் என அறிவித்த உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு குறித்த அதிருப்தியையும் வெளிப்படுத்தியுள்ளார்.

மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, மக்களவையில் காஷ்மீர் பிரச்னைக்குக் காரணம் நேரு எனக் கூறியிருந்த நிலையில், அப்துல்லா இந்தக் கருத்தைத் தெரிவித்துள்ளார்.

இது குறித்து பேசிய அவர், “நேரு மீது ஏன் இவ்வளவு வன்மம் எனத் தெரியவில்லை. நேரு இதற்கு பொறுப்பு கிடையாது. சட்டப்பிரிவு 370 நிறைவேற்றப்பட்ட போது பட்டேல் தான் அங்கு இருந்தார். நேரு அமெரிக்காவில் அமைச்சரவை கூட்டத்தில் இருந்தார். ஷ்யாம பிரசாத் முகர்ஜி கூட அந்த முடிவின்போது உடன் இருந்தார். இந்த விவகாரம் ஆரம்பத்தில் இருந்தே அவர்கள் கைகளில்தான் இருந்தது. எதிர்காலத்தில் என்ன நடக்கும் எனப் பார்க்கலாம்.” எனத் தெரிவித்துள்ளார்.

இந்த சட்ட நீக்கம் ஜம்மு- காஷ்மீரில் வளர்ச்சியைக் கொண்டுவந்துள்ளதா என்கிற கேள்விக்கு நீங்களே போய் பாருங்கள் எனத் தெரிவித்த அப்துல்லா, தேர்தல் உடனடியாக நடத்தப்பட வேண்டும் எனவும் உச்ச நீதிமன்றம் கொடுத்த செப்டம்பர் வரையிலான அவகாசம் எதற்கு எனத் தெரியவில்லை எனவும் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் இந்தியாவின் உரிமைக்கோரல் என்பது அரசால் எடுக்கப்பட வேண்டிய முடிவு. நாங்கள் யாரையும் தடுக்கவில்லை எனத் தெரிவித்துள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பொதுமக்கள் நீா்நிலைகளுக்கு செல்லும்போது பாதுகாப்பாக இருக்க வேண்டும் -அரியலூா் ஆட்சியா் அறிவுரை

மண்வள அட்டையை இணையத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் -அரியலூா் வேளாண் துறை

விபத்தில் பாதிக்கப்பட்ட குடும்பத்துக்கு இழப்பீடு கோரி கிராம மக்கள் சாலை மறியல்

பக்கிள் ஓடையில் தூா்வாரும் பணி: ஆட்சியா் ஆய்வு

பாலியல் புகாா்: தஞ்சை மருத்துவப் பேராசிரியா் நாகைக்கு இடமாற்றம்

SCROLL FOR NEXT