கர்நாடக முதல்வர் சித்தராமையா 
இந்தியா

எந்த அழைப்பும் வரவில்லை: சித்தராமையா

ராமர் கோயில் திறப்பு விழாவுக்கு இதுவரை எந்த அழைப்பிதழும் தனக்கு வரவில்லை என சித்தராமையா தெரிவித்துள்ளார்.

DIN

கர்நாடக முதல்வர் சித்தராமையா, அயோத்தி ராமர் கோயில் திறப்பு விழாவுக்கான அழைப்பிதழ் எதுவும் தனக்கு வரவில்லை எனவும் அழைப்பிதழ் கிடைத்ததும் விழாவில் பங்கேற்பது குறித்து முடிவு எடுப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

ஸ்ரீ ராம ஜன்மபூமி  தீர்த்த ஷேத்ரா அறக்கட்டளை நாடு முழுவதும் உள்ள பல்வேறு ஆளுமைகளையும் அரசியல் தலைவர்களயும் அயோத்தி ராமர் கோயிலில் நடைபெறும் மூலவர் பிரதிஷ்டை விழாவுக்கு அழைத்துள்ளது.

சித்தராமையா,  “இன்று வரை எனக்கு எந்த அழைப்பும் வரவில்லை. அழைப்பிதழ் வந்தால் அது குறித்து முடிவெடுப்போம்” எனச் செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.

வெள்ளிக்கிழமை, காங்கிரஸ் தலைவர்கள் மல்லிகார்ஜுன கார்கே மற்றும் சோனியா காந்தி ஆகியோர் இவ்விழாவில் பங்கேற்பார்களா என்பது குறித்து உரிய நேரத்தில் முடிவெடுக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டது.

பிரதமர் மோடி, உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்கும் விழா ஜன.22-ல்  நடைபெறவுள்ளது. 6 ஆயிரம் பொதுமக்கள் இதில் கலந்துகொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

புதிய பிரதமர் அலுவலகம் ‘சேவா தீர்த்’ தயார்: 1947-க்கு பின் முதல்முறையாக இடமாற்றம்!

சிறையில் காலமானார் வங்கதேச பாடகர் புரோலாய் சாகி

எச்.சி.எல் 3வது காலாண்டு நிகர லாபம் 11% சரிவு!

உ.பி. அணிக்கு எதிரான போட்டி: ஆர்சிபி பந்து வீச்சு!

சில்லறைப் பணவீக்கம் 1.33% ஆக உயர்வு

SCROLL FOR NEXT