இந்தியா

நாட்டில் புதிதாக 91 பேருக்கு கரோனா பாதிப்பு!

DIN

புது தில்லி: நாட்டில் ஒரு நாளில் புதிதாக 91 பேருக்கு தொற்று உறுதியாகி உள்ள நிலையில், மொத்த பாதிப்பு எண்ணிக்கை 4,46,83,454 ஆக உள்ளது.

கரோனா பாதிப்பு விவரங்களை மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் வெளியிட்டு வருகிறது. 

நாட்டில் புதிதாக 91 பேருக்கு தொற்று உறுதியாகியுள்ளது. இதனால் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 4,46,83,454 ஆக உள்ளது. தொற்று பாதிப்பால் இறந்தோரின் எண்ணிக்கை 5,30,745 ஆக உயர்ந்துள்ளது. அதே நேரத்தில் வழக்கு இறப்பு விகிதம் 1 சதவீதமாக பதிவு செய்யப்பட்டுள்ளது.

நாடு முழுவதும் தொற்றுக்கு சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை 1,817 ஆக உள்ளது. இதுவரை தொற்று பாதிப்பால் இறந்தவர்களின் எண்ணிக்கை 5,30,745 ஆக உள்ளது. 

தொற்று பாதிப்பில் இருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 4,41,50,892 ஆக பதிவாகியுள்ளது. 

நாடு தழுவிய தடுப்பூசி இயக்கத்தின் கீழ் இதுவரை 220,57,96.303 டோஸ் கரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது. ஞாயிற்றுக்கிழமை ஒரே நாளில் 43,277 டோஸ் தடுப்பூசி போடப்பட்டுள்ளது. 

நாட்டின் கரோனா தொற்று எண்ணிக்கை ஆகஸ்ட் 7, 2020 அன்று 20 லட்சத்தையும், ஆகஸ்ட் 23 இல் 30 லட்சத்தையும், செப்டம்பர் 5 இல் 40 லட்சத்தையும், செப்டம்பர் 16 இல் 50 லட்சத்தையும் தாண்டியது.

செப்டம்பர் 28 இல் 60 லட்சத்தையும், அக்டோபர் 11 ஆம் தேதி 70 லட்சத்தையும் தாண்டியது, அக்டோபர் 29 ஆம் தேதி 80 லட்சத்தையும், நவம்பர் 20 ஆம் தேதி 90 லட்சத்தையும் தாண்டியது, டிசம்பர் 19 ஆம் தேதி 1 கோடியைத் தாண்டியது.

2021 மே 4 ஆம் தேதி 2 கோடி, ஜூன் 23 இல் 3 கோடி மற்றும் கடந்த ஆண்டு ஜனவரி 25 இல் 4 கோடி என்ற மோசமான மைல்கல்லை கடந்தது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கேஜரிவால் இன்று மாலை பிரசாரம் தொடங்குகிறார்!

பிரஜ்வல் ரேவண்ணா வழக்கில் உண்மை வெளிவரும்: சித்தராமையா நம்பிக்கை

‘குற்றம் கடிதல் 2’ திரைப்படம் அறிவிப்பு!

ஆப்கனில் மிதமான நிலநடுக்கம்!

ராமஜெயம் கொலை பாணியில் ஜெயக்குமார் மரணம்?

SCROLL FOR NEXT