கோப்புப்படம் 
இந்தியா

வறண்ட வானிலை: பஞ்சாப், ஹரியாணாவில் கோதுமை பயிர் பாதிக்கலாம் - நிபுணர்கள் எச்சரிக்கை

பிப்ரவரி 1ஆம் தேதி முதல், பஞ்சாப் மற்றும் ஹரியானாவில் மாநிலத்தில் வானிலை பெரும்பாலும் வறண்டு காணப்படுவதால் இது கோதுமை பயிரை பாதிக்கலாம் என்று நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

DIN


சண்டிகர்: பிப்ரவரி 1 ஆம் தேதி முதல், பஞ்சாப் மற்றும் ஹரியாணாவில் மாநிலத்தில் வானிலை பெரும்பாலும் வறண்டு காணப்படுவதால் இது கோதுமை பயிரை பாதிக்கலாம் என்று நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.

அதிக வெப்பநிலை மற்றும் மழைப்பொழிவு இல்லாததால், நாட்டின் முக்கிய தானிய களஞ்சியமான இரு மாநிலங்களிலும் கோதுமை பயிர் பாதிக்கப்படலாம்.

அதே வேளையில் பயிர்கள் சற்று வாடி காணப்பட்டால், லேசான நீர்ப்பாசனம் வழங்கலாம்.

பஞ்சாப் மற்றும் ஹரியாணாவில் தற்போதைய அதிகபட்ச வெப்பநிலை சராசரியை விட 4-5 டிகிரி செல்சியஸ் ஆகவும், குறைந்தபட்சம் வெப்பநிலை சராசரியை விட 3-5 டிகிரி செல்சியஸ் அதிகமாக உள்ளது.

பஞ்சாப், ஹரியாணா மற்றும் சண்டிகரின் பெரும்பாலான பகுதிகளில் அடுத்த நான்கு அல்லது ஐந்து நாள்களில் வானிலை வறண்ட நிலையே காணப்படும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

பிப்ரவரி 20 ஆம் தேதி பதான்கோட், குர்தாஸ்பூர், ஹோஷியார்பூர் ஆகிய மாவட்டங்கள் மற்றும் பஞ்சாபின் அருகிலுள்ள பகுதிகளிலும் பிப்ரவரி 21 ஆம் தேதி பஞ்ச்குலா மற்றும் அதை ஒட்டியுள்ள பகுதிகளிலும் லேசான மழைத்தூறல் இருக்கக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

சண்டிகர் உள்பட இரு மாநிலங்களிலும் அடுத்த நான்கைந்து நாள்களில் அதிகபட்சம் மற்றும் குறைந்தபட்ச அளவிலான மாற்றம் ஏற்பட வாய்ப்பில்லை. 

லூதியானாவில் உள்ள பஞ்சாப் வேளாண் பல்கலைக்கழகத்தின் நிபுணர்களின் கூற்றுப்படி, வரும் நாள்களில் இந்த போக்கு தொடர்ந்தால், இது கோதுமை பயிரில் எதிர்மறையான விளைவுகளை ஏற்படுத்தும் என்று தெரிவித்துள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தங்கம் விலை ஒரே நாளில் ரூ. 1,120 உயர்வு!

உடுமலை விசாரணைக் கைதி மரணம்: வனத்துறை காவலர்கள் இருவர் பணியிடை நீக்கம்!

மலையாள நடிகர் கலாபவன் நவாஸ் விடுதி அறையில் மரணம்

திருச்செந்தூர் வெயிலுகந்தம்மன் கோயில் ஆவணித் திருவிழா கொடியேற்றம்!

ரஷிய எல்லைக்கு 2 அணு ஆயுத நீர்மூழ்கிக் கப்பல்களை அனுப்பிய டிரம்ப்!

SCROLL FOR NEXT