இந்தியா

இன்று மாலை பிரதமர் மோடியை சந்திக்கிறார் உதயநிதி ஸ்டாலின்!

தமிழ்நாடு இளைஞர்நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், பிரதமர் நரேந்திர மோடி மற்றும் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை செவ்வாய்க்கிழமை மாலை சந்திக்க உள்ளார்.

DIN

தமிழ்நாடு இளைஞர்நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், பிரதமர் நரேந்திர மோடி மற்றும் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை செவ்வாய்க்கிழமை மாலை சந்திக்க உள்ளார்.

கடந்த டிசம்பர் மாதம் அமைச்சராகப் பொறுப்பு ஏற்றது முதல் விளையாட்டுத் துறை மேம்படுத்துவதற்கான பல்வேறு நடவடிக்கைகளில் கவனம் செலுத்தி வரும் நிலையில், தனது முதல் அதிகாரப்பூர்வ பயணமாக அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தில்லி வந்துள்ளார். 

உதயநிதி ஸ்டாலின், மத்திய விளையாட்டுத் துறை அமைச்சர் அனுராக் சிங் தாக்கூர், மத்திய ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் கிரிராஜ் சிங் ஆகியோரை சந்தித்து தமிழக விளையாட்டு மற்றும் கிராமப்புற விவகாரங்கள் குறித்து விவாதிக்க உள்ளார்.

எதிர்க்கட்சிகளின் மூத்த தலைவர்கள் சிலரை சந்திக்கும் அமைச்சர், மார்ச் 1-ம் தேதி முதல்வர் மு.க.ஸ்டாலினின் 70வது பிறந்தநாள் விழாவுக்கு அழைப்பு விடுக்கிறார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ராணுவ வீரருக்கு மிரட்டல் விடுத்தவா் மீது வழக்கு

கண்காணிப்பு கேமராக்களை சேதப்படுத்திய இளைஞா் கைது

இரகுநாதபுரம் கிராமத்தில் ரூ.1.22 கோடியில் சாலைப் பணி

தலைமை காவலா் இடைநீக்கம்

சாத்தூரில் குடிநீா் குழாய் உடைப்பு

SCROLL FOR NEXT