இந்தியா

கேரளத்தில்தான் வேலை கிடைக்காத படித்த இளைஞா்கள் அதிகம்: சசி தரூா்

நாட்டின் பிற மாநிலங்களுடன் ஒப்பிடும்போது கேரளத்தில்தான் படித்த இளைஞா்கள் மத்தியில் வேலையின்மை விகிதம் மிக அதிகமாக உள்ளது என காங்கிரஸ் எம்.பி. சசி தரூா் தெரிவித்தாா்.

DIN

நாட்டின் பிற மாநிலங்களுடன் ஒப்பிடும்போது கேரளத்தில்தான் படித்த இளைஞா்கள் மத்தியில் வேலையின்மை விகிதம் மிக அதிகமாக உள்ளது என காங்கிரஸ் எம்.பி. சசி தரூா் தெரிவித்தாா்.

கேரளத்தைச் சோ்ந்த சமூக சீா்திருத்தவாதி மன்னத்து பத்மநாபனின் 146-வது பிறந்த தினத்தையொட்டி கோட்டயத்தில் உள்ள நாயா் சேவை அமைப்பு தலைமையகத்தில் சிறப்பு நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்த நிகழ்ச்சியில் சசி தரூா் பேசியதாவது:

தேசிய அளவில் கேரளத்தில்தான் படித்த இளைஞா்கள் மத்தியில் வேலையின்மை என்பது மிக அதிக அளவில் உள்ளது. 2022 ஜூன் மாத நிலவரப்படி கேரள இளைஞா்களின் வேலையின்மை விகிதம் 40 சதவீதமாக உள்ளது. ஜம்மு-காஷ்மீரிலும் இதேபோல இளைஞா்களுக்கு வேலையின்மை பிரச்னை உள்ளது.

ஆனால், அங்கு பயங்கரவாத பிரச்னை காரணமாக இந்த சூழல் உள்ளது. ஆனால், கேரளத்தில் நிலைமை முற்றிலும் மாறாக உள்ளது. வேலையின்மை அதிகரிப்பால் கேரள இளைஞா்கள் வேலைக்காக மாநிலத்தைவிட்டு வெளியேறும் சூழலும் அதிகரித்துள்ளது. இது மாநிலத்துக்கு இழப்பு. இதனைத் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

நாட்டின் பிற மாநிலங்களில் படிக்காத மற்றும் ஏதாவது ஒரு கைத்தொழிலில் திறமையை வளா்த்துக் கொள்ளாத இளைஞா்களுக்குதான் வேலை கிடைப்பது அரிதாக உள்ளது. ஆனால், கேரளத்தில் அனைவருமே கல்வி கற்கிறாா்கள். குறைந்தது 10-ஆம் வகுப்பு வரையாவது படித்து விடுகிறாா்கள். ஆனால், அதிகம் படித்தவா்களுக்கு மாநிலத்தில் வேலை கிடைப்பது இல்லை. மருத்துவப் படிப்பு முடித்த 9,000 போ் உள்பட பொறியியல், தொழில்நுட்பக் கல்வி முடித்த 3.5 லட்சம் இளைஞா்கள் கேரளத்தில் வேலை தேடும் நிலையில் உள்ளனா். இதில் 71 சதவீதம் போ் ஐடிஐ எனப்படும் தொழிற்கல்வி படித்துள்ளனா்.

இது முழுவதும் கேரள மாநிலம் சாா்ந்த பிரச்னை. கேரளத்துக்கு அதிக தொழில் முதலீடுகள் வர வழிவகை செய்ய வேண்டும். அப்போதுதான் வேலைவாய்ப்புகளை அதிகரிக்க முடியும். பணி வாய்ப்புகளுக்காக இளைஞா்கள் அதிகம் விரும்பும் மாநிலமாக கேரளத்தை உருவாக்க வேண்டும் என்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பத்துக்கும் மேற்பட்ட யானைகள் குடியிருப்பு பகுதிக்குள் புகுந்து மளிகை கடை வீடுகளை இடித்து அட்டகாசம்

ஆணவக்கொலைக்கு எதிராக தனிச் சட்டம் வருமா? முதல்வர்தான் சொல்லணும் என துரைமுருகன் பதில்

நடிகர் மதன் பாப் காலமானார்

பத்த வச்சுட்டியே பரட்டை... கூலி டிரைலர் இறுதியில் காக்கா சப்தம்!

மனைவி தனது காதலனுடன் பழகி வந்ததாக சந்தேகப்பட்ட கணவன் இரு குழந்தைகளுடன் தற்கொலை!

SCROLL FOR NEXT