இந்தியா

விரைவில் தந்தையாகப் போகும் அரசியல் பிரபலம்

பிகார் துணை முதல்வர் தேஜஸ்வி யாதவ் - ராஜஸ்ரீ தம்பதிக்கு இரண்டு மாதங்களில் குழந்தைபிறக்கப்போவதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

DIN


பாட்னா: பிகார் துணை முதல்வர் தேஜஸ்வி யாதவ் - ராஜஸ்ரீ தம்பதிக்கு இரண்டு மாதங்களில் குழந்தை பிறக்கப்போவதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

புத்தாண்டு கொண்டாட்டத்தை முன்னிட்டு, தேஜஸ்வி யாதவும் ராஜஸ்ரீயும் இணைந்து வாழ்த்து விடியோ வெளியிட்டிருந்தனர்.

அந்த விடியோவில், மாநிலத்தின் முன்னேற்றத்துக்காக, மக்கள் அனைவரும் ஒன்றுபட்டு பாடுபடவேண்டும் என்று உறுதிமொழி எடுத்துக் கொள்ள வேண்டும் என தேஜஸ்வி வலியுறுத்தியிருந்தார்.

பிகார் மக்களுக்கு புத்தாண்டு வாழ்த்துகள். மாநிலத்தை முன்னேற்றப்பாதையில் கொண்டு செல்லும் வகையில் எங்களது பணி இருக்கும். பிகாரின் முன்னேற்றப் பணிகளில் எங்களுடன் இணையுங்கள் என்று தேஜஸ்வி கூறியிருந்தார்.

இதற்கிடையே, இருவரும் மார்ச் மாதம் பெற்றோராகப் போவதாக கட்சி வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. தேஜஸ்வி - ராஜஸ்ரீ தம்பதிக்கு கடந்த 2021ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் திருமணம் நடந்தது. தற்போது கருவுற்றிருக்கும் ராஜஸ்ரீ தனது பெற்றோர் வீட்டில் இருக்கிறார் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பிரதீப் ரங்கநாதனின் டூட் படத்தின் முதல் பாடல்!

தருமபுரி திமுக முன்னாள் எம்எல்ஏ ஆா்.சின்னச்சாமி மறைவு: முதல்வர் ஸ்டாலின் இரங்கல்

தருமபுரி திமுக முன்னாள் எம்எல்ஏ ஆா்.சின்னச்சாமி காலமானாா்!

நாகை மாவட்டத்துக்கு செப். 8-ஆம் தேதி உள்ளூா் விடுமுறை அறிவிப்பு

பிகார் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்ட 65 லட்சம் பேரும் ஏழைகள்: ராகுல்!

SCROLL FOR NEXT