ராகுலின் நடைப்பயணத்துக்கு அயோத்தி ராமர் கோயில் தலைமை பூசாரி வாழ்த்து 
இந்தியா

ராகுலின் நடைப்பயணத்துக்கு அயோத்தி ராமர் கோயில் தலைமை பூசாரி வாழ்த்து

ஒற்றுமை நடைப்பயணத்துக்கு அயோத்தி ராமர் கோயிலின் தலைமை ஆச்சாரியா சத்தியேந்திர தாஸ், தனது வாழ்த்துகளை தெரிவித்துக் கொண்டுள்ளார்.

IANS


அயோத்தி: ஆச்சரியமளிக்கும் வகையில், உத்தரப்பிரதேசத்தில் இன்று நடைபெறும் ராகுல் தலைமையிலான ஒற்றுமை நடைப்பயணத்துக்கு அயோத்தி ராமர் கோயிலின் தலைமை ஆச்சாரியா சத்தியேந்திர தாஸ், தனது வாழ்த்துகளை தெரிவித்துக் கொண்டுள்ளார்.

காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி தலைமையிலான இந்திய ஒற்றுமை நடைப்பயணம் இன்று உத்தரப்பிரதேசத்தில் தொடங்கி நடைபெறவிருக்கிறது. 

இந்த நிலையில், "நீங்கள் இந்த நாட்டுக்காக செய்யும் அனைத்துப் பணியும் அனைவரின் நலத்துக்காகவே. எனது வாழ்த்துகள் எப்போதும் உங்களுக்கு" என்று சத்தியேந்திர தாஸ் எழுதிய கடிதத்தை இளைஞர் காங்கிரஸ் கட்சித் தலைவரிடம் அளித்துள்ளார்.

மேலும், "கடவுள் ராமரின் அருளாசியும் எப்போது உன்னுடன் இருக்கும்" என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இது குறித்து ஹனுமன் கோயில் பூசாரி ராஜூ தாஸ் கூறுகையில், இது அவரது தனிப்பட்ட கருத்து. அவரது கருத்துடன் ஒத்துப்போக முடியாது. காங்கிரஸ் எப்போதுமே இந்து மதத்துக்கு எதிரானது என்று தெரிவித்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கொடைக்கானலில் மீண்டும் போதைக் காளான் விற்பனை

மின்சாரம் பாய்ந்து தனியாா் நிறுவன ஊழியா் உயிரிழப்பு

இந்திய குடியரசு கட்சி மாநிலத் தலைவா் பி.வி.கரியமால் காலமானாா்

பைக்குகள் மோதல்: இருவா் காயம்

நெல்லை ரயில் நிலையத்தில் பயணிகள் மீது தாக்குதல்

SCROLL FOR NEXT