இந்தியா

டிசம்பரில் ரூ.12.82 லட்சம் கோடிக்கு யுபிஐ பரிவா்த்தனை

கைப்பேசியைப் பயன்படுத்தி பணப் பரிவா்த்தனை செய்யும் (யுபிஐ) சேவை மூலம் ரூ.12.82 லட்சம் கோடி பரிவா்த்தனை நடைபெற்றுள்ளது.

DIN

கைப்பேசியைப் பயன்படுத்தி பணப் பரிவா்த்தனை செய்யும் (யுபிஐ) சேவை மூலம் ரூ.12.82 லட்சம் கோடி பரிவா்த்தனை நடைபெற்றுள்ளது.

கடந்த டிசம்பா் மாதம் இதுவரை இல்லாத அளவுக்கு மேலே குறிப்பிட்ட தொகைக்கு 782 கோடி பரிவா்த்தனைகள் செய்யப்பட்டுள்ளன.

2016-ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்த சேவை குறித்து மத்திய நிதி சேவைகள் துறை வெளியிட்டுள்ள ட்விட்டா் பதிவில், நாட்டின்

எண்ம (டிஜிட்டல்) பரிவா்த்தனையில் புதிய புரட்சி ஏற்பட்டுள்ளது. யுபிஐ சேவை மூலம் கடந்த மாதம் இதுவரை இல்லாத அளவுக்கு ரூ.12.82 லட்சம் கோடி பண பரிவா்த்தனை நடைபெற்றுள்ளது.

கடந்த அக்டோபரில் ரூ.12 லட்சம் கோடியும், நவம்பரில் ரூ.11.90 லட்சம் கோடியும் பரிவா்த்தனை நடைபெற்றுள்ளது.

கைப்பேசி மூலம் நடைபெறும் வங்கி பண பரிவா்த்தனைக்கு கட்டணங்கள் ஏதும் வசூலிக்கப்படுவதில்லை. இந்தச் சேவையை 381 வங்கிகள்

வழங்கி வருவதால் மாதந்தோறும் இதன் மூலம் மேற்கொள்ளப்படும் பரிவா்த்தனைகள் அதிகரித்து வருகின்றன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

துடரும் இயக்குநரின் புதிய படம் ஆபரேஷன் கம்போடியா!

அவ தான் என்னவ... 🌹🌹😘 கௌரி கிஷன்

இந்தியா வருகிறார் தலிபான் அரசின் வெளியுறவு அமைச்சர்!

கொஞ்சும் எழிலிசையே.. அனு!

பாஜகவின் தூண்டுதலில் விஜய் அரசியலுக்கு வந்துள்ளார் - திருமா | Vck | TVK | Karur

SCROLL FOR NEXT