இந்தியா

சோனி இணையத் தொடருக்கும் ஷ்ரத்தா கொலைக்கும் என்ன தொடர்பு?

சோனியில் வெளியான ''கிரைம் பேட்ரோல்'' என்ற இணையத் தொடரில் (வெப் சீரிஸ்) தில்லியில் கொடூரமாக கொலைசெய்யப்பட்ட ஷ்ரத்தா வால்கர் கொலை வழக்குக்கும் எந்தவித தொடர்பும் இல்லை என சோனி நிறுவனம் விளக்கம்.

DIN


சோனியில் வெளியான ''கிரைம் பேட்ரோல்'' என்ற இணையத் தொடரில் (வெப் சீரிஸ்) தில்லியில் கொடூரமாக கொலைசெய்யப்பட்ட ஷ்ரத்தா வால்கர் கொலை வழக்குக்கும் எந்தவித தொடர்பும் இல்லை என சோனி நிறுவனம் விளக்கம் அளித்துள்ளது. 

சோனியில் 'கிரைம் பேட்ரோல்' என்ற தொடர் 2003ஆம் ஆண்டு முதல் ஒளிபரப்பாகி வருகிறது. நிஜ வாழ்க்கையில் நடைபெறும் கொலை, கொள்ளை, பாலியல் வன்கொடுமை போன்ற குற்றப் பின்னணிகளை அடிப்படையாக வைத்து புனைவு கதாபாத்திரங்களை வைத்து தொடர் எழுதப்பட்டு வருகிறது. 

அந்தவகையில் சமீபத்தில் 'கிரைம் பேட்ரோல்' தொடரில் ஒளிபரப்பான எபிஸோடுகள், தில்லி ஷ்ரத்தா கொலை வழக்கின் சாயலில் இருப்பதாக விமர்சனங்கள் எழுந்தன. 

இதற்கு சோனி நிறுவனம் தனது அதிகாரப்பூர்வமான சுட்டுரைப் பக்கத்தில் விளக்கம் அளித்துள்ளது. அதில், 'கிரைம் பேட்ரோல்' தொடரில் ஒளிபரப்பான சமீபத்திய எபிஸோடுகளுக்கும், தில்லி ஷ்ரத்தா கொலை வழக்குக்கும் எந்தவித தொடர்பும் இல்லை. அந்த காட்சிகள் புனையப்பட்டவை. 2011ஆம் ஆண்டு நடைபெற்ற குற்றச்சம்பவத்தை பின்னணியாக வைத்து எழுதப்பட்ட சித்தரிக்கப்பட்ட கதைக்களம். சமீபத்தில் வெளியான எபிஸோடுகள் ஷ்ரத்தா கொலை வழக்கை ஒத்திருப்பதாக பலர் சமூக வலைதளங்களில் கருத்துகளைப் பதிவிட்டு வருகின்றனர். இது குறித்து தெளிவுபடுத்த விரும்புகிறோம். இந்த காட்சிகள் புனையப்பட்டவை. சமீபத்திய சம்பவங்களுடன் தொடர்புப்படுத்தும் வகையில் எடுக்கப்படவில்லை. 

யாரையும் புண்படுத்தும் நோக்கம் எங்களுக்கு இல்லை. எனினும், பார்வையாளர்களின் உணர்வுகளுக்கு மதிப்பு கொடுத்து இந்த எபிஸோடுகள் பாதியில் நிறுத்தப்படுகின்றன. சமீபத்திய எபிஸோடுகள் பார்வையாளர்களை காயப்படுத்தியிருந்தால், அதற்கு வருத்தம் தெரிவித்துக்கொள்கிறோம் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

புதிய இணையத் தொடரில் சைத்ரா ரெட்டி!

ஓடிபி விவகாரம்- திமுகவின் வழக்கு தள்ளுபடி

டிரம்ப் விதித்த 25% வரி... ஆடைத் தயாரிப்புத் துறையில் 20 லட்சம் பேர் வேலை இழக்கும் அபாயம்!

காணாமல் போன 3 சிறுவர்கள் சடலமாக மீட்பு: உ.பி.யில் அதிர்ச்சி!

அடுத்த 20 ஆண்டுகளுக்கு படம் இயக்கவுள்ள இயக்குநர் பற்றி தெரியுமா?

SCROLL FOR NEXT